Sivagangai

News January 19, 2026

சிவகங்கைக்கு மத்திய அரசு சொன்ன GOOD நியூஸ்..

image

செங்கோட்டை, ராமேஸ்வரம், எர்ணாகுளம் விரைவு ரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல மத்திய அமைச்சர் எல்.முருகன் ரயில்வே அமைச்சருக்கு பரிந்துரைத்துள்ளார். மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கையை ஏற்று, ரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

News January 19, 2026

சிவகங்கை: விவசாயி தற்கொலை செய்து கொண்ட சோகம்

image

பீர்க்கலைக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (46). விவசாயி மற்றும் கூலி வேலை செய்து வந்த இவர், மது போதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முருகேசனின் மனைவி பாண்டிச்செல்வி மற்றும் அவரது குழந்தைகள் அவரை கண்டித்ததாக கூறப்படும் நிலையில், வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 19, 2026

சிவகங்கை: HI சொன்னா., இனி வங்கி விபரங்கள் உங்க Whatsapp-ல

image

சிவகங்கை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க…

News January 19, 2026

சிவகங்கை: ரவுடிகள் மீது அதிரடி ஆக்சன்..!

image

சிவகங்கை மாவட்டத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக புகாரளிக்கப்பட்ட இவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் மாவட்டத்தில் 47 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 19, 2026

சிவகங்கை: கார் மோதி சம்பவ இடத்தில் பரிதாப பலி!

image

தேவகோட்டை அருகே உள்ள கோடிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராக்கம்மாள் (71). இவர் கோவிலுக்கு சென்று விட்டு, திருச்சி – ராமேஸ்வரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத ஒரு கார் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, அவரது மகன் தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 18, 2026

சிவகங்கை: உங்க CERTIFICATE தொலைந்து விட்டதா.? APPLY…

image

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், <>”E-பெட்டகம்”<<>> என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க

News January 18, 2026

சிவகங்கை: இ-சேவை மையத்திற்கு NO.. ஒரு CLICK போதும்!

image

சிவகங்கை மக்களே, உங்களுக்கு தேவையான

1.சாதி சான்றிதழ்

2.வருமான சான்றிதழ்

3.முதல் பட்டதாரி சான்றிதழ்

4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்

5.விவசாய வருமான சான்றிதழ்

6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்

7.குடியிருப்புச் சான்றிதழ்

மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் CLICK செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க

News January 18, 2026

தாம்பரம் – செங்கோட்டை ரயில்கள் சிவகங்கையில் நிறுத்தம்

image

தாம்பரம் – செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் 3 ரயில்களுக்கு, சிவகங்கையில் நிறுத்தம் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். இதனால் சிவகங்கை மாவட்ட பயணிகள் பெரிதும் பயன்பெறுவர். மேலும் பயணிகள் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதாக சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

News January 18, 2026

சிவகங்கை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

சிவகங்கை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 18, 2026

சிவகங்கை: ரு.78,800 ஊதியத்தில் மத்திய அரசு வேலை

image

சிவகங்கை மக்களே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-50 வயதுக்குட்பட்ட 10th, 12th, ITI, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 30க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். இதற்கு சம்பளம் ரூ.19,900 – ரு.78,800 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

error: Content is protected !!