India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்ட காவல்துறை இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும்அசம்பாவிதங்களை தவிர்க்கவும்சேலம் மாவட்டகாவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சேலம் மாவட்டகாவல்துறை உட்கோட்டத்திற்க்குட்பட்டசேலம் ஊரகம்,சங்ககிரி,ஆத்தூர்,மேட்டூர்,ஓமலூர்,வாழப்பாடிஉட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள்ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று 7-2-2025 இரவுரோந்து அதிகாரிகளின் விவரம்
சேலம் மாவட்டத்தில் வரும் 10ஆம் தேதி, தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
2024- 25ஆம் நிதியாண்டில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் 20,696 கடைகள்,வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உரிய கட்டணம் செலுத்தி வர்த்தக உரிமத்தைப் பெற்றுள்ளன. இதன்மூலம் ரூ.97.89 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உரிமம் பெறாதவர்கள் தற்போது இணையதளம் வாயிலாக மனு செய்து மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்தி, வணிக உரிமத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.டி.வி.அருண்குமார், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின்போது, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் உடனிருந்தார்.
கோவை-திருப்பதி இடையே சென்றுகொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணிக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கர்ப்பிணி என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இணைப்புச்சாலை அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள், அவ்வழியாக வந்த அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தங்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் மக்கள் வலியுறுத்தினர்.
பிப்.11 தைப்பூசம், பிப்.12 பௌர்ணமியை முன்னிட்டு சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை (பிப்.08) முதல் வரும் பிப்.13ம் தேதி வரை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சேலத்தில் இருந்து சென்னை, வடலூர், பெங்களூரு, ஓசூருக்கும், மேற்கண்ட இடங்களில் இருந்து சேலத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்தார்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று (பிப்.07) தொடங்கியுள்ளது. பிப்.14- க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செய்முறைத் தேர்வை சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் செய்முறை தேர்வில் மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஜாதிப் பாகுபாடு உள்ளதா என்பதை கண்டறிய, நேற்று (பிப்.06) ஆய்வு நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, ஆர்.டி.ஓ. அபிநயா உள்ளிட்டோர் கைதிகளிடம் ஜாதிப் பாகுபாடு குறித்து கேட்டறிந்தனர். இதுதொடர்பாக, கைதிகள் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.
சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்:1) காலை 7 மணி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இரண்டு நாள் இலவச யோகா பயிற்சி முகாம் மாதவம் அரங்கம்.2) காலை 10 மணி தலைவாசல் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாகட்டமாக அமைச்சர்கள் பங்கேற்பு.3) காலை 10 மணி சுகவனேஸ்வரர் திருக்கோவில் சிறப்பு பூஜை.4)காலை 11 மணி தமிழ்நாடு ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்
Sorry, no posts matched your criteria.