India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செப்.17) மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தெரிவித்தார்.

சேலம் மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

சேலம் மக்களே.. மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100.
▶️வயது வரம்பு: 18-27 வரை.
▶️கடைசி தேதி: செப்டம்பர் 28.
இந்த <

தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. தெற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் வளி மேல் அடுக்கு சுழற்சி நிலை கொண்டிருப்பதால் தமிழகத்தில் சேலம் உட்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சேலம் மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மக்களே இந்த மாதத்திற்கான வேலை வாய்ப்புகள்;
▶️Power Grid – https://www.powergrid.in/
▶️IOCL – https://iocl.com/
▶️Intelligence Bureau – https://www.mha.gov.in/en
▶️UPSC – https://upsc.gov.in/
▶️Bank of Maharashtra – https://bankofmaharashtra.in/
▶️TNPSC TANGEDCO – https://www.tnpsc.gov.in/english/notification.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க மக்களே..ஒருவருக்காவது உதவும்

சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்- போத்தனூர் வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில், நாகர்கோவில்-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரல்-செங்கோட்டை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செப்.17) காலை 8 மணிக்கு தொடங்கியது. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள கணினி முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

சேலம் மக்களே..மெரி பஞ்சாயத்து<
‘Grievance/Complaint’ பிரிவில்:
➡️ உங்கள் பெயர்
➡️ கிராமம்
➡️ புகார் விவரங்கள் உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம்.
▶️புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்!
▶️புகாரின் நிலையும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் நேரடியாகக் கண்காணிக்கலாம். இதைஅனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சேலம் செப்.17 இன்றைய முக்கிய நிகழ்வுகள்;
▶️காலை 9 மணி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இவெரா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தல்
▶️ காலை 10 மணி கோ ஆப் டெக்ஸ் தங்க மாளிகையில் தீபாவளி விற்பனை துவக்கம் ஆட்சியர்
▶️காலை 11 மணி ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி உறுதிமொழி அமைச்சர் பங்கேற்பு
▶காலை 10 மணி பாரதிய ஜனதா கட்சி செய்தியாளர் சந்திப்பு கட்சி அலுவலகம் மாலை 5 மணி டி ஒய் எஃப் ஐ ஆர்ப்பாட்டம்

சேலம் கோரிமேடு அரசு ஐடிஐயில் மூன்று மாத காலத்திற்கு கடிகாரம் பழுது பார்க்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். டைட்டான் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு வரும் செப்.20 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு கோரிமேடு ஐடிஐ அலுவலகத்தை அணுகலாம்.

சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் வரும் செப்.26- ஆம் தேதி மதியம் 03.00 மணிக்கு நடக்கின்றது என மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தனலட்சுமி தெரிவித்துள்ளார். அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சேலம் மேற்கு கோட்டம், சேலம் 636002 என்ற முகவரிக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.