Salem

News February 13, 2025

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதம்!

image

“தமிழ்நாடு முதலமைச்சர் பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையிலான சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள்; தமிழ்நாடு முதலமைச்சர் வளர்ந்து வரும் மக்கட்தொகை தேவைக்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள்” என சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதம்.

News February 13, 2025

பாலியல் புகார்: மருத்துவக் கல்லூரி ஊழியர் சஸ்பெண்ட்

image

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆய்வக தொழில்நுட்புனர் வேலு என்பவரை. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவிகளின் புகாரையடுத்து விசாரித்த கல்லூரியின் விசாரணைக் குழு, பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

News February 13, 2025

புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்!

image

சேலம் வணிக வரித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதியதாகக் கட்டப்படவுள்ள பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று (பிப்.13) அடிக்கல் நாட்டினார். விழாவில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News February 13, 2025

வெற்றி பெற்றவர்கள் அமைச்சரிடம் வாழ்த்து

image

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 4வது குடியரசுத் தினக் குழு விளையாட்டு இறகுப்பந்து போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி முதல் மற்றும் இரண்டாம் பரிசை வென்றவர்கள், சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனை இன்று (பிப்.13) நேரில் சந்தித்து கோப்பையைக் காண்பித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர்.

News February 13, 2025

434 காலிப்பணியிடங்கள்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>இங்கு க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

65 வயதில் சந்தேகம்: பெண் கொலை

image

சேலம் கோட்டை கவுண்டன்பட்டியைச் சேர்ந்த 60 வயதான இந்திரா வீட்டில் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படும் என்றும், அதனால் அவரது கணவர் பாலகிருஷ்ணன் மனைவியை கொலை செய்திருக்கலாம். தற்போது பாலகிருஷ்ணன் தலைமறைவாக உள்ளார்.

News February 13, 2025

சேலத்தில் 6 வங்கதேசத்தினர் கைது

image

சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் அனுமதியின்றி வெளிநாட்டினர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கிச்சி பாளையம் போலீசார் மேற்கொண்ட சோதனையில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்த பங்களாதேஷை சேர்ந்த காசி அலி, மிர்சரி, இஸ்மாயில், மிர்ஆரிப், செரிப், செலிம் ஆகிய ஆறு பேரை கண்டுபிடித்து உரிய ஆவணங்கள் இல்லாததால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 13, 2025

தாரமங்கலம்: ரம்மியில் தொழிலாளி தற்கொலை

image

தாரமங்கலம், கருக்குபட்டி பவளத்தானூரை சேர்ந்த தமிழ்மணி (37) தறித்தொழில் செய்து வந்தார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி விளையாடி இழந்துள்ளார். பணத்தைத் திருப்பி செலுத்தாமல் மன அழுத்தத்தில் இருந்த அவர், மதுவில் விஷம் கலந்து குடித்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 13, 2025

சேலத்தில் போக்சோவில் 3 மாணவர்கள் கைது

image

ஆத்தூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிக்கு அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளி வேலை நேரம் முடிந்த பின் மாலையில் பள்ளி வளாகத்துக்குள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவியின் பெற்றோர் குழந்தைகள் உதவி மையத்திற்கு புகார் அளித்தனர். இதன்பேரில் மாணவர்கள் 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

News February 13, 2025

போதை இல்லா தமிழ்நாடு கைபேசி செயலி

image

மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி கூறியதாவது, போதையில்லா தமிழ்நாடு என்ற கைபேசி செயலியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இதன் வாயிலாக போதை பொருள் பயன்படுத்துதல் குறித்த தகவல் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக வருகின்ற 18ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கான அறிமுக கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!