Salem

News August 28, 2025

சேலம் டிகிரி முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

image

சேலத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு மற்றும் தயாரிப்பு மற்றும் எம்படெட் சோதனை பயிற்சி வழங்கப்பட உள்ளது இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்த 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்ட சமூக இளைஞர்கள் விருப்பமுள்ளவர்கள் இணையதளம் www.tahdco.com விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவிகேட்டுக் கொண்டுள்ளார்.

News August 28, 2025

சேலம்: செம்ம வாய்ப்பு..உடனே APPLY பண்ணுங்க!

image

சேலம் மக்களே, National High Speed Rail Corporation Limited காலியாக உள்ள 36 Assistant Technical Manager, Junior Technical Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 15.09.2025 ஆகும். இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..!

News August 28, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

சேலம் மாவட்டத்தில் இன்று (28.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

image

ஆக.29- ல் கண்ணூரில் இருந்து பெங்களூருவுக்கும், ஆக.30- ல் பெங்களூருவில் இருந்து கண்ணூருக்கும் சிறப்பு ரயில்கள் (06125/06126) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் மட்டும் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

சேலம்: டிகிரி போதும்..தமிழ்நாடு அரசில் வேலை!

image

சேலம் மக்களே, தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக Data Entry Operator, Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 25.09.2025 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 28, 2025

சேலம் விமான பயணிகளின் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று (ஆக.28) பெங்களூரு, கொச்சினுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இயக்கப்படவிருந்த அனைத்து ஏர் அலையன்ஸ் விமான சேவைகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

சேலம்: B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

சேலம் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 – 1,20,000 முதல் வழங்கப்படும்.இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு இன்ஜினியர் மாணவர்களுக்கு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 28, 2025

ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

சேலம் ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை நாளை முகாம் நடைபெறும் இடங்கள் ▶️அம்மாபேட்டை மண்டலம் நேரு கலை அரங்கம் பழைய பேருந்து நிலையம
▶️புள்ளகவுண்டம்பட்டி அக்ரஹாரம் வி.பி.ஆர்.சி.எண் கட்டிடம் வினோபாஜி நகர்
▶️ தாரமங்கலம் தாரமங்கலம் சமுதாயக்கூடம் ▶️வீரகனூர் சிவன் கோவில் அருகில் சமுதாயக்கூடம் ▶️காடையாம்பட்டி மீனாட்சி திருமண மண்டபம் மரக்கவுண்டன் புதூர் ▶️கொளத்தூர் விபிஆர்சி கட்டிடம் சத்யா நகர்

News August 28, 2025

சேலம் கேஸ் சிலிண்டர் இருக்கா?

image

சேலம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இதனை மறக்காமல் கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க.

News August 28, 2025

சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு கூடுதல் பத்திரப்பதிவு

image

தமிழகத்தில் இன்றும் நாளையும் சுப முகூர்த்த தினம் என்பதால் பத்திரப்பதிவு செய்ய விரும்பும் நபர்கள் அதிக அளவில் இருப்பார்கள் அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் இன்றும் நாளையும் கூடுதலாக டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 150 டோக்கன் முதல் 200 டோக்கன் ஆக அனுமதிக்கப்படும் என பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!