Salem

News January 6, 2026

சேலம்: பொங்கல் பரிசு வரலையா? உடனே CALL!

image

சேலம் மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

சேலம்: Spam Calls-க்கு இனி ‘End Card ‘!

image

பிஸியான நேரத்தில் வரும் லோன், கிரெடிட் கார்டு போன்ற தேவையில்லாத ஸ்பேம் (Spam Calls) அழைப்புகளால் பலரும் கடுப்பாகி இருப்பீர்கள்.இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம், 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்

News January 6, 2026

சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

கோயம்புத்தூரிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் ஜோலார்பேட்டை வழியாக ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் (Dhanbad) வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 03680) இன்று (06.01.2026) காலை 07.50 மணிக்குக் கிளம்ப வேண்டியிருந்தது. ஆனால், இஇணைப்பு ரயில் (Pairing Train) தாமதமாக வருவதன் காரணமாக, மாலை 04.15 மணிக்கு (16.15 hrs) கோவையிலிருந்து கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2026

ஆத்தூரில் மின்சாரம் தாக்கி பெண் பலி

image

ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மனைவி லட்சுமி (50). இவர் நேற்று தனது வீட்டின் மாடிக்குச் சென்ற போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாகச் சென்ற உயர் அழுத்த மின் கம்பி லட்சுமி மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 6, 2026

சேலம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

ஆட்டையாம்பட்டியில் சிக்கிய பெண் கொள்ளையர்கள்!

image

சேலம் ஆட்டையாம்பட்டி அருகே சீரகாபாடி, மதுரையான்காட்டை
சேர்ந்த பூமலர் (45) என்பவரது வீட்டில் 27 பவுன் நகை மற்றும் 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே திருச்சியைச் சேர்ந்த ஷானவாஸ் என்பவரைக் போலீசார் கைது செய்தனர்.அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கூட்டாளிகளான மதுரை விளாங்குடியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (56) மற்றும் ஜானகி (39) ஆகிய பெண்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News January 6, 2026

சேலம்: குழந்தைக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம்.இதனை ஷேர் பண்ணுங்க

News January 6, 2026

சேலத்தில் தட்டிதுக்கிய விஜய்!

image

சேலம்: மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி நாச்சிமுத்து பேத்தியும், கொளத்தூர் பகுதி வழக்கறிஞருமான நந்தினி தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். நேற்று தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் முன்னிலையில், ஓமலூர்,எடப்பாடி, மேட்டூர், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதியைச் மாற்றுக் கட்சியினர் 2500 பேர் தவெகவில் இணைந்தனர்.

News January 6, 2026

ஓமலூர் அருகே தாய், மகள் துடிதுடித்து பலி!

image

ஓமலூரை அடுத்த மானத்தாள் ஏரிக்கரையை சேர்ந்த கிட்டு மனைவி பாக்கியம். இவரது மகள் மஞ்சு ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் விவசாய கூலி வேலைக்காக ரயில்வே நேற்று தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, மேட்டூர் பகுதியிலிருந்து வந்த ரயில் இன்ஜின் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 6, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (ஜன.05) இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!