India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சிலர் சேலம் ஆட்சியரிடம் குறைதீர்க்கும் முகாமில் கொடுத்த மனு சின்ன சேலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் குப்பையில் கிடந்துள்ளது. இதனை அடுத்து மனுதாரர்கள் இச்சம்பவம் குறித்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் குறை தீர்ப்பு முகாமில் கொடுக்கப்பட்ட மனு குப்பையில் வீசி சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள மாநகராட்சி பல்நோக்கு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திரன் ஊனமுற்றோர் என்ற பெயரை மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டும் என்று மாற்றியவர் கலைஞர். கடந்த மூன்று ஆண்டில் 82 கோடி நிதி ஒதுக்கி தந்துள்ளார். எப்பொழுதும் திமுக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்கும் என கூறினார்.
சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக சேலம் வழியாக பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில், வரும் நவ.12-ஆம் தேதி முதல் ஜன.29- ஆம் தேதி வரை இயக்கப்படும் என சேலம் தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சேலம், திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் சிறப்பு ரயில் (03326) கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று (நவ.9) மதியம் 12.55 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் 11 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 11.55 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து, பைக் மீது மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், நல்லவாய்ப்பாக 20-க்கும் மேற்பட்ட பணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். பைக்கில் சென்ற நபர் உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சேலம் வழியாக கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை வரும் நவ12- ம் தேதி முதல் ஜனவரி 29-ம் தேதி வரை இயக்கப்படும். சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் வருகின்ற நவ.16, 17, 23, 24 ஆகிய 4 நாட்கள் நடைபெறவுள்ளது. இம்முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள 3,264 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் என சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
தண்டவாளங்களில் பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் நவ.11, 15, 16, 18, 22, 24, 25, 29, 30 ஆகிய 9 நாட்கள் மட்டும் திருச்சிராப்பள்ளி- பாலக்காடு டவுன் ரயில் (16843) சூலூர் சாலை வரை மட்டுமே இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக, சூலூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
90 ஆண்டுகளில் முதல்முறையாக மேட்டூர் அணையைத் தூர்வார நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. சோதனை அடிப்படையில் மேட்டூர் அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூர்வார நீர்வளத்துறை திட்டம்; சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதியை பெறுவதற்கான ஆலோசகர்களை நியமனம் செய்ய டெண்டர் கோரியது; அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வார திட்டம்!
சேலம், பெரிய சீரகாப்பாடியைச் சேர்ந்த மனோஜ்- எழிலரசி ஜோடிக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இதில் மாப்பிள்ளையின் நண்பர்கள் வைத்த திருமண பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பெயர், வயது, தொழில், ஊதியம், புகைப்படங்களுடன் “அடுத்த மாப்பிள்ளை நாங்க.. பொண்ணு இருந்தால் தாங்க..பொண்ணு இருந்தால் மட்டும் போதும்” போன்ற வாசகங்களும் பேனரில் இடம் பெற்றிருந்தது.
Sorry, no posts matched your criteria.