Salem

News January 28, 2026

சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

தைப்பூசம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 300 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பேருந்து நிலையங்களிலிருந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 1,900 பேருந்துகளுடன் இந்த கூடுதல் பேருந்துகளும் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட உள்ளன.

News January 27, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.27) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News January 27, 2026

சேலத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

ஜோடுகுளி, எலத்தூர், தீவட்டிப்பட்டி, மூக்கணுார், ஆலச்சம்பாளையம், மலங்காடு, வெள்ளாண்டிவலசு ஒரு பகுதி, பழைய எடப்பாடி, மெய்யம்பாளையம், மணியகாரம் பாளையம், வேம்பனேரி, திருமாலுார், காவேரிப்பட்டி,பெரமச்சிபாளையம், தலைவாசல் கால்நடை பம்ப், பைப்பூர், ஆரூர்ப்பட்டி,சேடப்பட்டி,மேட்டுமாரனுார், நாகி ரெட்டியூர், முனியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (ஜன.28) காலை 5 மணி முதல் 9 வரை மின் தடை!

News January 27, 2026

சேலத்தில் 78 கடைகள் மீது அதிரடி வழக்கு!

image

குடியரசு தினத்தன்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத சேலம், ஆத்தூர் மற்றும் மேட்டூர் பகுதிகளில் உள்ள 24 கடைகள், 52 உணவகங்கள் மற்றும் 2 மோட்டார் நிறுவனங்கள் என மொத்தம் 78 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இனிவரும் காலங்களில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

News January 27, 2026

சேலம்: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை !APPLY NOW

image

சேலம் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

News January 27, 2026

சேலம்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

image

1) நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2) குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3) 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4) 100 சதவித முத்திரைத்தாள், பதிவுக்கட்டணம் இலவசம்
5) <>newscheme.tahdco.com<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6) மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.
(SHARE)

News January 27, 2026

சேலம்: பிறப்பு, இறப்பு சான்று வேண்டுமா?

image

சேலம் மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

News January 27, 2026

சேலம் ரயில்வே கோட்டத்தில் ரூ.612.58 கோடி வருவாய்

image

ரயில் பயணிகள் சேவை மூலம் நடப்பாண்டில் சேலம் கோட்டம் ரூ.612.58 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலால் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இது முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட 5.6 சதவீதம் அதிகமாகும். அதேநேரத்தில், சரக்கு வருவாய் ரூ.244.26 கோடியாக உள்ளது. இது 10.03 சதவீதம் அதிகமாகும். சிறப்பு ரயில்களின் இயக்கம் மூலம் ரூ.41.74 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றார்.

News January 27, 2026

சேலம்: 12th போதும்.. சூப்பர்வைசர் வேலை!

image

ஆதார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு
1) பதவிகள்: சூப்பர்வைசர், ஆபரேட்டர் (மொத்தம் 282 இடங்கள்)
2) கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
4) மாதச் சம்பளம்: ₹20,000/-
5) கடைசி தேதி: ஜனவரி 31, 2026.
6) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 27, 2026

மேட்டூர்: பேருந்து பயணத்தில் நேர்ந்த விபரீதம்

image

மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ். இவரது தாயார் சந்திரா. இவர் காஞ்சிகோவிலில் நேற்று முன்தினம் மாலை நிகழ்ச்சி ஒன்றில் வேலை முடிந்து, மேட்டூர் செல்லும் தனியார் பஸ்ஸில் நின்றபடி பயணித்தார். அப்போது ஒரு வளைவில் பஸ் திரும்பியது. இதில் சந்திரா பஸ்ஸில் இருந்து கீழே விழுந்தார். காயத்துடன் GH-ல் சேர்த்ததில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!