India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சேலம் மத்திய மாவட்ட திமுக தலைவர் சுபாஷ் 31-வது திமுக வார்டு செயலாளர் இப்ராஹிம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், பெங்களூருவில் இருந்து குழுவாகச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதியான மணிகண்டனிடம் (34) இருந்து செல்போன், சிம் கார்டு, பேட்டரி உள்ளிட்டப் பொருட்களை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உதவி சிறை அலுவலர், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செல்போனை பயன்படுத்திய கைதி மணிகண்டனை 3 மாதம் உறவினர்களிடம் பேசத் தடை விதித்து சிறைக் கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு இருமார்க்கத்திலும் இயக்கப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) விமான சேவைகள் (6E7919/ 6E7923) இன்று (டிச.24) ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சேலம் விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனத் தகவல்.
சேலம் மாவட்டத்தில் (டிச. 24) இன்றைய முக்கிய நிகழ்வுகள். 1) காலை 10 மணி வருமானவரித்துறை அலுவலகம் முன்பு அம்பேத்கர் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம். 2) காலை11 மணி பாட்டாளி மக்கள் கட்சியினர் 10.5% கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம். 3) காலை11 மணி சேலம் மாநகராட்சி மன்ற இயல்பு கூட்டம். 4) காலை10 மணி குமாரசாமி பட்டி ஆயுதப்படை மைதானத்தில ஏலம் விடும் வாகனங்களை பார்க்க அனுமதி.
சேலம் மாவட்ட போலீசாரால் பயன்படுத்தப்பட்டு காலாவதியான 9 நான்கு சக்கர வாகனங்கள், 7 இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் வரும் 26ஆம் தேதி குமாரசாமிபட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நான்கு சக்கர வாகங்களுக்கு ரூ.5,000, பைக்கிற்கு ரூ.1000 முன்பணமாக செலுத்தவும். மேலும், விபரங்களுக்கு 94981-67289 என்ற எண்ணை அழைக்கவும்.
சேலம் மாநகரில், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 23 இரவு அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், விலையில்லா பித்தளை தேய்ப்பு பெட்டிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சமூகத்தினர், ஆண்டு வருமானம் 72 ஆயிரத்து கீழ் உள்ளவர்கள், 21 முதல் 45 வயது உள்ளவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பதிவு செய்து கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு டிச.24- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும் டிச.25-ஆம் தேதி கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் (06557/ 06558) இயக்கப்படுகின்றன. சேலம், திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்கள் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும். டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
சேலம் சாமிநாதபுரத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு இன்று (டிச.23) வருகை தந்த, பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, அம்மனுக்கு மாலை, புடவைகளை வழங்கி சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், நடிகர் யோகிபாபுடன் பக்தர்கள் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
Sorry, no posts matched your criteria.