Salem

News February 18, 2026

சேலம் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

சேலம் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினந்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, இன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும்

News February 18, 2026

சேலம் விமான நிலையம் அட்டவணை வெளியீடு

image

சேலம் விமான நிலையத்தில் இருந்து பிப்ரவரி 19, 2026 அன்று இயக்கப்பட உள்ள விமானங்களின் அட்டவணையை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) வெளியிட்டுள்ளது. இதன்படி, இண்டிகோ விமான சேவையின் மூலம் ஹைதராபாத் மற்றும் சென்னை இடங்களுக்கு சேவை வழங்கப்படுகிறது. ஹைதராபாத் விமானம் மதியம் 12.40 மணிக்கு வருகை தந்து 1.05 மணிக்கு புறப்படும். சென்னை விமானம் பிற்பகல் 3.20 மணிக்கு வருகை தந்து 3.40 மணிக்கு புறப்படும்.

News February 18, 2026

சேலம்: ஒரு மிஸ்டு கால் போதும்; வங்கி விவரம் போனில்..!

image

சேலம் மக்களே, வங்கிக்கு செல்லாமல் வங்கி சேவைகளை வீட்டில் இருந்து செய்ய வழி இருக்கு..

Indian Bank ; 96776 33000

SBI : 9223766666

HDFC : 18002703333

ICICI : 9594612612

Axis : 18004195959

Canara : 09015483483

PNB : 18001802223 உங்களின் வங்கி நிறுவன எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தா வங்கி கணக்கு பேலன்ஸ் மற்றும் சேவைகளை போனில் மெசேஜ் -ஆக வரும். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க…!

News February 18, 2026

ரயில் பயணிகளுக்கு “அன்பு” வேண்டுகோள்!

image

ரயில் பயணம் இனிமையாக அமையப் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைச் சேலம் ரயில்வே கோட்டம் (DRM) வெளியிட்டுள்ளது. அதன்படி, மொபைலில் பேசும்போது சத்தத்தைக் குறைக்கவும், இசை மற்றும் வீடியோக்களை கேட்க எப்போதும் ஹெட்போன் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செல்போனை சைலண்ட் அல்லது வைப்ரேட் பயன்முறையில் வைத்து, சிறந்த பயண அனுபவத்தை உருவாக்க ஒத்துழைக்கக் கோரப்பட்டுள்ளது.

News February 18, 2026

சேலத்தில் வேலை வேண்டுமா? கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

சேலம் கோரிமேடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 20 (வெள்ளி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து பதிவு செய்யவும்.கூடுதல் விவரங்களுக்கு 0427-2401750 எண்ணைத் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

News February 18, 2026

சேலம்: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

image

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

சேலம்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 18, 2026

சேலம்: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 18, 2026

BREAKING: சேலத்தில் இளம்பெண் தற்கொலை

image

சேலத்தைச் சேர்ந்த சண்முகபிரியா என்பவர், கௌதம் என்பவரை காதலித்து வந்தார். பின், கௌதமின் நடத்தை சரியில்லாத காரணத்தால் சண்முகபிரியா அவருடன் பழகுவதை துண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கௌதம், தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த சண்முகபிரியா கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

News February 18, 2026

சேலம் அருகே விபத்து

image

சேலம் அருகே வீராணம் அடுத்த குப்பனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த டூவீலர் அவர் மீது மோதியது. அப்பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!