India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மத்திய சிறையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 23 சிறை கைதிகள் எழுதிய நிலையில் 23 பேரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சேலம் மத்திய சிறையிலிருந்து தேர்வு எழுதி 100% தேர்ச்சி பெற்றது இதுவே முதல் முறையாகும். தேர்ச்சி பெற்றவர்களை சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் நேரில் அழைத்து பாராட்டினார்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.64% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 85.81 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.22 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் சேலம் மாவட்டம் 18ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 91.75% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.79% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.81% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
சேலம் மாவட்டம் மணி விழுந்தான் காலனி பகுதியை சேர்ந்த அழகுத்துரை என்பவர், நேற்று(மே 9) அதிகாலை 3 மணியளவில் ஆத்தூர் நோக்கி டேங்கர் லாரி ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் ஆட் கொல்லி பாலம் அருகே வரும்போது செந்தில்குமார் என்பவர் வீட்டின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது இதில் வீட்டில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இ-பாஸ் அமல்படுத்தப்படாததால் இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. சாலையோர கடைகளில் வியாபாரம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மலைப்பாதையில் கவனமாக வாகனத்தில் செல்ல வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சேலம், சங்ககிரி, ஆவரங்கம்பாளையம் அருகே கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த காரின் பின்பக்க டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் கீர்த்தி குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சேலம், இரும்பாலை அருகே ஓம்சக்தி நகர் பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் நாச்சிமுத்து, மனைவி ஜெகதாம்பாள் ஆகியோரது உடல் அழுகிய நிலையில் இன்று அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டுக்குள் கணவன் மனைவி சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் வேலை வாய்ப்பு சார்ந்த பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஸ்கௌட் (SCOUT) திட்டத்தில் தமிழகம் முழுவதும் 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் பயிற்சிக்கு அனுப்பப்பட உள்ளனர். இதில் 2 மாணவர்கள் பெரியார் பல்கலை. இணைவு பெற்ற கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சேலம் அருகே மல்லிக்குட்டை பாரதிபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சந்தோஷ்(12), அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் சுதர்சன்(11). அரசு பள்ளியில் படித்து வந்த இவர்கள், பள்ளி விடுமுறை காரணமாக நேற்று(மே 8) மல்லி குட்டை ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சேற்றில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுவர்களின் உடலை மீட்டனர்.
Sorry, no posts matched your criteria.