Ramanathapuram

News March 14, 2026

இராம்நாடு: OPS அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

image

ராமநாதபுரம் தனியார் மஹாலில் நேற்று மார்ச்.13 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் மீட்பு கழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 14, 2026

பரமக்குடி: பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்.!

image

பரமக்குடி அருகே உள்ள கலையூர் கருங்குளம் கிராமத்தில் ராமாயி என்ற மூதாட்டி (82) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்குக்கு பிறகு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. உடல்தானம் செய்த ராமாயி குடும்பத்தாரிடம் மருத்துவமனை நிர்வாகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது.

News March 13, 2026

ராம்நாடு : குறைந்த வட்டியில் ₹10 லட்சம் கடன்

image

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்’ ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதற்கு 4 முதல் 6 % மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருட முன்அனுபவம் தேவை. விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

News March 13, 2026

ராம்நாடு மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

ராம்நாடு மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறுவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: shttps://coimbatore.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 13, 2026

இராம்நாடு: டிகிரி போதும்.. ரூ.65,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.65,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 13, 2026

இராம்நாடு: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

image

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, ​SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

News March 13, 2026

இராம்நாடு: டூவீலர் வாங்க ரூ.50,000 மானியம்; கலெக்டர் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், உலமாக்­கள் மற்றும் பணியாளர்­கள் நல­வாரி­யத்தில் பதிவு­ பெற்ற 18 வயது மு­தல் 60 வயது­ வரை­ உள்­ள­ உலமாக்களுக்கு, இரு­சக்­க­ர­வாகனம் வாங்­க­ மானியத்­ தொகை ரூ.25,000 லிருந்­து ரூ.50,000 ஆக உயர்த்தி­ த­மிழக அர­சால் ஆணையிடப்­பட்டுள்­ளது. ஆகையால் தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்­ணப்­பங்கள் வர­வேற்­கப்­ப­டுகி­றது. என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

News March 13, 2026

இராம்நாடு: OPS அணியினர் அதிமுகவில் இணைந்தனர்

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் M.A முனியசாமி தலைமையில், ஓபிஎஸ் அணியினர் தங்களை நேற்று அதிமுகவில் (மார்ச்.12) இணைத்துக்கொண்டனர். அதன்படி இராமநாதபுரம் தெற்கு ஒன்றிய ஓபிஎஸ் அணியினை சேர்ந்த பாஸ்கரன், ராமச்சந்திரன், நாகேந்திரன், தாமோதரன், துரை ஆகியோர் அஇஅதிமுகவில் இணைந்தனர்.

News March 13, 2026

இராம்நாடு: ஆன்லைன் மோசடி கும்பல் கூண்டோடு கைது.!

image

இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், பரமக்குடி மற்றும் சத்திரக்குடி பகுதிகளில் ID ஒட்டி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த 7 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து வங்கி கணக்கு புத்தகங்கள், ATM கார்டுகள், லேப்டாப்கள் மொபைல் போன்கள், டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 13, 2026

இராம்நாடு: ஆன்லைன் மோசடி கும்பல் கூண்டோடு கைது.!

image

இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், பரமக்குடி மற்றும் சத்திரக்குடி பகுதிகளில் ID ஒட்டி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த 7 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து வங்கி கணக்கு புத்தகங்கள், ATM கார்டுகள், லேப்டாப்கள் மொபைல் போன்கள், டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!