India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.18) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் 5 பேர் குழு ஜன.,10,11ல் புதிய பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர். இதையடுத்து புதிய பாலம் விரைவில் திறக்கப்படும். ரயிலில் பயணிக்கலாம் என பயணிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.இந்நிலையில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிக்கு ராமேஸ்வரம் செல்லாது என ரயில்வே அறிவித்தது. இதனால் பாம்பன் பாலம் திறப்பு தள்ளிபோனது. புதிய ரயில் துாக்கு பாலத்திற்கு என்னாச்சு என தெரியாமல்
மக்கள் குழம்பியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு சரவணன் தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியாமல் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த முடியவில்லை அதனால் தான் பணி செய்ய முடியவில்லை என உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.இந்த நிலையில் இன்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு ராமநாதபுரம் டிஐஜி அபிநவ் குமார் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவி வருவதன் காரணமாக ஜன.18 நாளை மாலை முதல் அடுத்த 2 நாட்களுக்கு ராமநாதபுரத்தில் நாளை மாலை முதல் கடலோர ஒட்டிய பகுதியிலான ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தேவிபட்டினம், தொண்டி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் உள்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை அமைப்பு அறிவித்துள்ளது. *ஷேர்
தைப்பொங்கல் 2025 விழாவின் போது வெளியூர் மற்றும் சுற்றுலாவிற்கு செல்லும் பயணிகள் அதிகரித்த வேளையில், அதன் தேவையை பூர்த்தி செய்ய, ஒரு வழி சிறப்பு ரயில் மண்டபத்திலிருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்பட இருக்கிறது. வரும் ஜன19 ஞாயிறு இரவு 10.00 மணிக்கு மண்டபத்தில் புறப்பட்டு, 10.30 மணிக்கு ராமநாதபுரத்திலும் 11 மணிக்கு பரமக்குடியிலும் நின்று செல்லும். *ஷேர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.17) நண்பகல் 2 மணிமுதல் மாலை 4 மணிவரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அவசர உதவிக்கு 100 அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை செல்ல ஜன.19 இரவு 10 மணிக்கு மண்டபம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (வ: எண் 06048) கிளம்புகிறது. ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழி செல்லும் இந்த ரயிலின் முன்பதிவு இன்று (ஜன 17) 8 மணிக்கு IRCTC தளத்தில் தொடங்க உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.16) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர உதவிக்கு 100 அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக டிஎஸ்பி முருகாதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்*
ராமநாதபுரத்தில் வரும் ஜனவரி 18ம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரி 19ம் தேதி, தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.