Ramanathapuram

News March 18, 2026

ராமநாதபுரம்: ரூ.4.90 லட்சம் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் திருப்புல்லாணி சோதனைச்சாவடியில் நேற்று நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த கீழக்கரை முகம்மது சகில் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4.90 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 17, 2026

இராமநாதபுரம்: பள்ளத்தில் கவிழ்ந்த கார்

image

கடம்பாகுடியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தோட்டாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு தனது மனைவியுடன் காரில் தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. நிலைதடுமாறிய கார் சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த பாலு அவரது மனைவி இருவரும் நல்வாய்ப்பாக காயமுமின்றி தப்பினர்.

News March 17, 2026

இராமநாதபுரம்: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News March 17, 2026

இராமநாதபுரம்: வேனுக்கு அடியில் சிக்கி 4 வயது சிறுமி பலி

image

நாச்சியேந்தல் கிராமத்தில் தினமும் பள்ளிக்கு தனியார் வேன் மூலம் மாணவர்களை ஏற்றி செல்வது வழக்கம், அதேபோல் மாணவர்களை ஏற்றிச் செல்ல வந்த வேனின் முன்பு இளையராஜா மகள் கிரேசன்னா(4) விளையாடிக் கொண்டிருந்ததை கவனிக்காத வேன் ஓட்டுனர் வேனை இயக்கியதால் வேனுக்கடியில் சிக்கிய 4 வயது குழந்தை பலியானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டுனர் கணேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 17, 2026

இராம்நாடு: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

இராமநாதபுரம் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD செயலி<<>> (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

பாம்பன் மீனவர்களுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்

image

பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்.24 அன்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மார்ச்.16 மூன்றாவது முறையாக மீனவர்கள் வெளிச்சூரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களை வருகிற மார்ச்.23 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ராம்நாடு: மக்களுக்காக புதிய புகார் பெட்டி – கலெக்டர் நடவடிக்கை

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் திங்கள் கிழமை நடைபெறும் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மக்களிடம் மனுக்களை பெறுவதற்கு புதிய கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

News March 16, 2026

ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு – கலெக்டர் தகவல்

image

தமிழக காவல் துறையில் நடைமுறையில் உள்ள ‘ஆர்டர்லி’ முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் ஆர்டர்லி முறை தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட காவலர்கள் கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) – 94450 08147 புகார் அளிக்கலாம் என கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!