India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு கடல் பகுதியில் இருந்து நேற்று (பிப்.2) காலை தொழிலுக்குச் சென்ற விசைப்படகுகள் இலங்கை மன்னார் தென் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. இதில் ஒரு படகு, அதிலிருந்த 10 மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று (பிப்.3) அதிகாலை சிறை பிடித்து மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
தமிழகத்திலிருந்து இஞ்சி மூடைகள் கடத்தப்படுவதாக இலங்கை கற்பிட்டி போலீஸ் சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் கற்பிட்டி போலீசாருடன் இலங்கை சிறப்பு அதிரடி படையினர் இணைந்து ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது சம்மட்டி வாடி கடற்கரை பகுதியில் இருந்து கொழும்பிற்கு இஞ்சி மூடைகளை கடத்திக் கொண்டு சென்ற லாரியை மறித்தனர். அதில் 45 மூடைகளில் 1839 கிலோ இஞ்சி இருப்பது தெரிந்து பறிமுதல் செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (02.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் ஏற்படும் இன்னல்களுக்கு இந்த உதவி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் (அ) 100 ஐ டயல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் தீவில் வசிக்கும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் தாகத்தை காவிரி குடிநீர் தணிக்கிறது. பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் நடைபாதையின் கீழ் குழாய் மூலம் ராமேஸ்வரம் தீவுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பாலம் நடுவில் குழாய் உடைந்து காவிரி குடிநீர் கடலில் கலந்து பல ஆயிரம் லிட்டர் வீணாகிறது. ராமேஸ்வரம்தீவு மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர், விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள், ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு பாதுகாப்பான முறையில் அழைத்து வரப்பட்டனர். அவர்களை, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். பின்னர், அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், அனைவரையும் ராமேஸ்வரத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
மண்டபத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (01.02.25) இரவு மண்டபம் வந்து தங்குகிறார். நாளை (02.02.25) காலை 10 மணி அளவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், கீழக்கரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின் கீழக்கரையில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார்.
ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் மண்டபத்திலிருந்து பாம்பனில் தெற்கு ரயில்வே சார்பில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் 2.08 கி.மீ தூரம் கடலில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்திற்கான பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடர்பான புகைப்படங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
ராமநாபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு ஜன.13 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை ஈடுகட்டும் பொருட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு நாளை (பிப்.1) பணி நாளாக கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் அறிவித்துள்ளார்.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியான கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் & ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி, ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம். உடற்தகுதி, திறன், எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு. பிப்.3ஆம் தேதிக்கு மேல் cisfrectt.cisf.gov.in ல் விண்ணப்பிக்கலாம். *ஷேர்
கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்கு ராமேசுவரத்திலிருந்து படகுகள் மூலம் பக்தா்கள் செல்வது வழக்கம். வருகின்ற மாா்ச் 14, 15 ஆகிய தேதிகளில், 91 படகுகளில் ரூ.2,500க்கும் மேற்பட்ட பக்தா்கள் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான விண்ணப்பம் பிப்.6 முதல் 15ஆம் தேதி வரை வழங்கப்படும். பிப்.25க்குள் விண்ணப்பங்களை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். *ஷேர்*
Sorry, no posts matched your criteria.