Ramanathapuram

News January 7, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை முகாம்

image

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை 07.01.2026 முதல் 31.01.2026 (விடுமுறை தினத்தை தவிர்த்து) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை திட்டத்தின் கீழ் இ – சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இ சேவை மையங்கள் வழியாக பஸ் பாஸ் பதிவு செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஜன.06) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News January 6, 2026

இராம்நாடு: EMI-ல கார், பைக் வாங்கியவர்கள் கவனத்திற்கு!

image

இராம்நாடு மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அதை மாற்ற…

1. இங்கு <>க்ளிக்<<>> செய்து > தமிழ்நாடு > Hypothecation Termination தேர்ந்தெடுங்க.

2. வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க.

3. சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும்.

மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 6, 2026

ராமநாதபுரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

ராமநாதபுரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க

News January 6, 2026

ராமநாதபுரத்தில் நாதக நிர்வாகிகள் கைது

image

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு பேருந்து என பெயர் இல்லாமல் இருந்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளை இராமேஸ்வரம் காவல் துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.

News January 6, 2026

ராம்நாடு: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

ராம்நாடு மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

ராம்நாடு: பஸ் புக்கிங் செய்த போது ரூ.1 லட்சம் மோசடி

image

ஆன்லைனில் பேருந்து டிக்கெட் புக் செய்த போது கூகுளில் தேடிய தவறான கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு ரூ.1 லட்சம் பணத்தை இழந்த அகமது அஸ்லாம் என்பவர் இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சைபர் கிரைம் காவல்துறையினர் விரைவாக விசாரணை மேற்கொண்டு முழு தொகையையும் மீட்டு இன்று காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைத்தார்.

News January 6, 2026

ராம்நாடு: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க..

image

ராம்நாடு மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News January 6, 2026

ராம்நாடு: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க..

image

ராம்நாடு மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News January 6, 2026

இராமநாதபுரம் மாவட்டத்தில் இங்கெல்லாம் மின்தடை

image

1.இராமநாதபுரம் – ஆர்.கே நகர், எம்.ஜீ.ஆர் நகர், ரமலான் நகர், மேலக்கோட்டை, மாடக் கோட்டான், இளமனூர், பேராவூர், தில்லைநாயகிபுரம், பழங்குளம்,
2.திருப்புல்லாணி சுற்றுவட்டார பகுதிகள்
3.மண்டபம் & இராமேஸ்வரம் துணை மின்நிலையம்
4.திருப்பாலைக்குடி துணை மின்நிலையம்
5.காவனூர் துணை மின்நிலையம்
6.திருவாடானை துணை மின்நிலையம் சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். *SHARE

error: Content is protected !!