Ramanathapuram

News September 11, 2024

பரமக்குடியில் நடந்த விபத்தில் 9 பேர் படுகாயம்

image

இமானுவேல் சேகரன் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக நாமக்கல்லில் இருந்து பரமக்குடிக்குச் சென்ற கார், சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியாது. நல்வாய்ப்பாக இவ்விபத்தில் 9 பேர் உயிர் தப்பினர். இதில் படையப்பா என்பவரின் 2 கால்களும் முறிந்த நிலையில் ஒரு கால் அகற்றப்பட்டது. மீதமுள்ள 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.. இது குறித்து பரமக்குடி போலீசார் விசாரக்கின்றனர்.

News September 11, 2024

பரமக்குடி வட்டாரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

image

இம்மானுவேல் சேகரனாரின் 67-வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிலையில், பரமக்குடி வட்டாரத்தில் உள்ள 84 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News September 11, 2024

பரமக்குடியில் பொது போக்குவரத்தில் மாற்றம்

image

பரமக்குடியில் இன்று(செப்.10) தியாகி இமானுவேல் சேகரன் 67வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி அனைத்து அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் மரியாதை செலுத்த வருகை தருவர். இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, ராமநாதபுரத்தில் இருந்து வரும் பேருந்துகள் நயினார் கோவில், இளையான்குடி, சிவகங்கை, மேலூர் வழியாக பரமக்குடிக்குள் வராமல் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

News September 10, 2024

9007 மெ.டன் உரம் இருப்பு : ராமநாதபுரம் ஆட்சியர் தகவல்

image

நடப்பு சம்பா பருவத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அனைத்து தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா-5100 மெ.டன், டி.ஏ.பி-1495 மெ.டன், பொட்டாஷ்-109 மெ.டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2206 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் உரங்கள் 97 மெ.டன் என 9007 மெ.டன் உரங்கள் இருப்பு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

பரமக்குடியில் பைக்கில் வர கட்டுப்பாடு!

image

பரமக்குடியில் நாளை(செப்.10) தியாகி இமானுவேல் சேகரனாரின் 67 வது நினைவுதினத்தை முன்னிட்டு தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா பரமக்குடி நகர் முழுவதும் கண்காணிக்க டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தார். தொடர்ந்து நாளை இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு தடையை மீறி இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News September 10, 2024

வடக்கு கடல் படகுகள் நாளை தொழிலுக்கு செல்ல தடை

image

நாளை (செப்.11) கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலும் அதிகபட்சமாக 65 கி.மீ. வரையிலும் வீசம் மற்றும் கடல் அலை 2.1 முதல் 2.4 மீட்டர் உயரத்தில் எழக்கூடும். இதனால் மண்டபம் வடக்கு கடல் பகுதி விசைப்படகுகள், நாட்டுப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது என உதவி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் சிவக்குமார் இன்று (செப்.10) தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் -2 பேர் பலி

image

கீழக்கரை அருகே பனையடி ஏந்தலைச் சேர்ந்த முனியசாமி மகன் ஜெயபால்(21). இவர் தனது டூவீலரில் இன்று காலை இதம்பாடல் அருகே சென்றார். அப்போது ஏர்வாடியை சேர்ந்த அப்துல் ஹலீம்(19), ( + 2 மாணவர்) சின்ன ஏர்வாடி ஷரீப் (19) உடன் டூவீலரில் வந்தார். 2 டூவீலரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயபால், அப்துல் ஹலீம் ஆகியோர் இறந்தனர். ஷரீப் காயமடைந்தார். இது குறித்து சிக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 10, 2024

இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

இலங்கை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் திருடி கடந்த 2020-ம் ஆண்டு தப்பி வந்து தனுஷ்கோடியில் இலங்கை போலீஸ்காரர் பிரதீப்குமார் பண்டாரா (34) கைதானார். திருச்சி முகாமில் தங்கி உள்ள இவர் மீதான வழக்கு ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நீதிபதி குமரகுரு வழக்கினை அடுத்த மாதம் 4-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

News September 10, 2024

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் காலோன் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்டத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 10, 2024

பரமக்குடியில் தீவிர கண்காணிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.,11 ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 67ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பரமக்குயில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 3,000க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட்டுள்ளனர். மேலும், பரமக்குடி நகர் முழுவதிலும் 26 இடங்களில் 76 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போலீசார்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!