India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (ஜன.27) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இராம்நாடு மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

திருவாடானை அருகே பாசிபட்டினத்தைச் சோ்ந்த ராஜதுரை (30). கடந்த 24ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற போது காணாமல் போனாா். இது குறித்து கடலோரக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், நேற்று எஸ்.பி.பட்டினம் அருகே கடற்கரையில் ராஜதுரையின் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த எஸ்.பி.பட்டினம் போலீஸாா் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இராமநாதபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கி கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <

பார்த்திபனூர், கமுதக்குடி, பிடாரி சேரி, நெல்மாத்தூர், புதுக்குடி, சுடியூர், நரிக்குடி உள்ள 33/11 என்ற துணை மின் நிலையம் மற்றும் கமுதி தாலுகா, அபிராமம், பசும்பொன், கே வேப்பங்குளம், பேரையூர், பாப்பான்குளம் உள்ள 33/11 என்ற துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் காரணமாக நாளை ஜன.28ம் தேதி காலை 9 மணி முதல் காலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.*SHARE IT

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையைக் கண்டித்தும் அங்கு தேசியக்கொடி ஏற்ற முயன்ற காவிப்புலிப்படை அமைப்பினர் 28 பேரை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்தனர். அக்கட்சியின் தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையில் படகு மூலம் செல்ல முயன்றபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வைரவனேந்தல் அருகே காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(35). நேற்று முன்தினம் இவர் உறவினர் வீட்டிற்கு சென்று அதிகாலை 12.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது குளத்தூர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகன மோதியதில் உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்தியவர் மீது வழக்கு பதியும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1. இங்கு <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

ராமநாதபுரம் மாவட்டம், அருங்குளத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பில்லத்தியான் (45), பரமக்குடி தனியார் மருத்துவமனையில் ஊசி செலுத்திய சில நிமிடங்களில் மயங்கி உள்ளார். பரமக்குடி அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நேற்று தனியார் மருத்துவமனை ஊசி செலுத்தியதே காரணம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எமனேசுவரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை.

இந்தியப் பெருங்கடலில் பயணித்த 2 மீன்பிடிப் படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். சோதனையில் 184 கிலோ ஹெராயின், 112 கிலோ ஐஸ் போதைப் பொருட்களை பதுக்கி வைத்தது
தெரியவந்தது. இதையடுத்து, போதைப் பொருட்கள் மற்றும் இரு படகுகளையும் பறிமுதல் செய்து படகுகளில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 11 பேரை கைது செய்தனர். (இதன் மதிப்பு ரூ.3000 கோடி என கூறப்படுகிறது)
Sorry, no posts matched your criteria.