India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மரைன் போலீசாருக்கு ரகசிய தகவலின் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடற்கரை பகுதியில் சோதனை நடத்திய போது பதுக்கி வைத்திருந்த 110 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 30 கிலோ கடல் குதிரைகளை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (ஜன 28) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இராம்நாடு மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

இராம்நாடு, வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

ராம்நாடு மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்<

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: C<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட்.08 அன்று மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையினர் கைது செய்து 18 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.1.46 கோடி அபராதம் விதித்து சிறையில் அடைத்தது. சிறையில் உள்ள 10 மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து மீனவர்களை வீடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

ராமநாதபுரம் நகராட்சி துப்புரவு பணியாளர்களின் தங்குமிடம் மோசமாக இருந்ததை கண்ட நீதிபதிகள் மெஹபூப் அலிகான் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் அதிகாரிகளைக் கடுமையாகக் கண்டித்தனர். நம் உறவினர்களை இங்கு தங்க வைப்போமா? இவர்களும் மனிதர்கள்தானே எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அடுத்த 10 நாட்களுக்குள் பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என நகராட்சி சுகாதார அலுவலருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

வங்கி ஊழியர்களின் ராமநாதபுரத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 27 வங்கிகளில் மொத்தம் 51 பெண்கள் உள்பட 150 ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கின. குடியரசு தின விடுமுறையை தொடர்ந்து இந்த போராட்டம் நடந்ததால், 4 நாட்கள் வங்கிகள் செயல்படவில்லை. இதனால் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டதுடன், 90% ஏ.டி.எம்-கள் பணமின்றி முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Sorry, no posts matched your criteria.