Ramanathapuram

News January 30, 2026

இராமநாதபுரம்: இரவில் ஆடுகளை திருடும் கும்பல்

image

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சமத்துவபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி வருகின்றனர். இது குறித்து காவல் இப்பகுதி மக்கள் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் காவலர்கள் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News January 30, 2026

பரமக்குடி பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

image

பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளான சத்திரக்குடி, போகலூர், நயினார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள 110/33-22 -11 துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் காரணத்தினால் நாளை (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் செய்தி தொகுப்பில் தெரிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பொதுமக்கள் செய்து கொள்ளும்படியும் கேட்டுக்
கொள்ளப்படுகிறது. *ஷேர் பண்ணுங்க

News January 30, 2026

இராம்நாடு: Spam Calls-க்கு இனி END

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். நெல்லை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 30, 2026

இராம்நாடு: SBI வங்கி வேலை; ரூ.48,480 மாத சம்பளம்!

image

இராம்நாடு மக்களே; SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்களுக்கு மாத சம்பளம் ரூ.48,480 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பக்க கடைசி தேதி 18.02.2026. தகுதியானவர்கள்<> CLICK <<>> செய்து விண்ணப்பிக்கலாம். *வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

இராம்நாடு: விடுமுறை அறிவித்த கலெக்டர்

image

வருகின்ற பிப்.1ம் தேதி வடலூர் இராமலிங்க அடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் இராமநாதபுரத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், அனைத்து எப்.எல்., 2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபான கடைகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் காலோன் தெரிவித்துள்ளார். இதனை மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

இராம்நாடு: சூறாவளிக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

பிப்ரவரி 1 – 4 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, தமிழக கடலோரப் பகுதிகளில் மன்னார் வளைகுடா பகுதிகளான இராமநாதபுரம் மற்றும் குமரிக்கடலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஜனவரி 30, 31) மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

News January 29, 2026

பாம்பனில் தலைகுப்புற கவிழ்ந்த கிரேன்

image

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள பழைய இரும்பு தூக்கு பாலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் பாரம் தாங்காமல் தலைகுப்புற கவிழ்த்து. நூற்றாண்டு பழைமையான பாம்பன் இரும்பு தூக்கு பலத்தை அகற்ற பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் முதல் நாளிலே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியே ஏற்படுத்தியுள்ளது.

News January 29, 2026

இராம்நாடு: இனி Gpay, Phonepe, paytm -க்கு குட்பை!

image

இராம்நாடு மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்

News January 29, 2026

இராம்நாடு: சமையல் சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

இராம்நாடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு க்ளிக் செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். (SHARE பண்ணுங்க)

News January 29, 2026

இராம்நாடு: திருமணத் தடை & குழந்தை வரம் தரும் கோயில்

image

ராமேஸ்வரத்திற்கு அருகில் அமைந்துள்ளது 108 வைணவத் திவ்ய தேசங்களில் 44-வது தலமான திருப்புல்லாணி ஆதி ஜெகன்நாதர் கோயில். பிள்ளை வரம் கேட்டல் தான் இத்தலத்தின் மிகச் சிறப்பு பெற்ற பிரார்த்தனை. சேது தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் விலகும்; கிரக தோஷங்கள் நீங்கும். திருமணத்தடை உள்ளவர்கள் உற்சவர் கல்யாண ஜெகந்நாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். *SHARE (வேறு கோயில் குறித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்)

error: Content is protected !!