Ramanathapuram

News January 31, 2026

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஜன.31) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News January 31, 2026

இராம்நாடு: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

ராம்நாடு மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டைநகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே<> கிளிக் <<>>செய்து தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் செலுத்தி விருப்பமான பெயரை மாற்றிகொள்ளலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 31, 2026

ராம்நாடு: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

ராமநாதபுரம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இங்கு கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் ரசீது சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க

News January 31, 2026

ராம்நாடு: 11.53 வினாடி வேகம்.. இளைஞருக்கு குவிந்த பாராட்டு!

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், 100 மீ. ஓட்டப்போட்டியை 11.53 வினாடிகளில் முடித்த முகேஷ்குமார் என்ற இளைஞரை நேற்று (ஜன.30) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் பாராட்டி வெகுமதி வழங்கினார். இந்நிகழ்வில் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

News January 31, 2026

ராம்நாடு: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

image

ராமநாதபுரம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <>இங்கு க்ளி<<>>க் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

News January 31, 2026

ராம்நாடு: டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

image

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் கீர்த்தி பாபு (55) டிஎஸ்பி. இவர் குடும்பத்தினருடன் காரில் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தார். ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் நேற்று காலை வந்த போது தூக்கத்தில் அவ்வழியாக சென்ற டிராக்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிராக்டர் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. டிராக்டரை ஒட்டி வந்த சுப்பிரமணியன் (50) காயமடைந்தார். இது குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரனை

News January 31, 2026

இராம்நாடு: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

பரமக்குடி: இன்று இங்கெல்லாம் பவர் கட்

image

பரமக்குடி துணைமின் நிலையத்தில் இன்று (ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பரமக்குடி நகர், நயினார்கோவில், சத்திரக் குடி, கமுதக்குடி, சிட்கோ பகுதி, எமனேசுவரம், மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பரமக்குடி நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

News January 30, 2026

இராம்நாடு: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை ஐகோர்ட் : 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 30, 2026

ராம்நாடு: இனிமேல் சிலிண்டர் இப்படி BOOK பண்ணுங்க..

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

error: Content is protected !!