India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பசும்பொன்னில் இன்று (அக்.30) முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பெரியசாமி, பெரிய கருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் இன்று (அக்.,30) முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62ஆவது குருபூஜை விழா முன்னிட்டு இன்று (அக்.30) பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராம்நாடு வரும் பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மதுரையிலிருந்து ராம்நாடு வரும் பேருந்துகள் சிவகங்கை காளையார் கோவில் வழியாக ராம்நாடு வரும் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி வழியாக சாயல்குடி செல்லும் பேருந்துகள் இன்று இயக்கப்படாது. ராமநாதபுரம் சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு பேருந்து இயக்கப்படும்.
தமிழக கடலோர காவல் படை இந்திய கடலோர காவல்படை மற்றும் கப்பல் படை இணைந்து கடலில் சஜாக் ஆப்ரேஷன் நடத்தியது. அதன் அடிப்படையில் தேவிபட்டினம் மரைன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், அய்யனார் தலைமையில் தனி பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் எஸ்.பி .பட்டினம் முதல் தேவிபட்டினம் வரை கடலோர காவல் படைக்கு சொந்தமான அதிநவீன படகுமூலம் தொண்டி கடல் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. அரசாணை வெளியிட்டு ஒரு வருடமான நிலையில் மனு தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பசும்பொன்னில் நாளை (அக்,29) முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வபெருந்தகை, கருமாணிக்கம், மாங்குடி, மு.எம்பி திருநாவுக்கரசர் மு.எம்.எல்.ஏக்கள் ராமசுப்புராம், சுந்தரம்,ரமேஷ்பாபு, செல்வராஜ் மகாத்மா சினிவாசன், டாக்டர் மாணிக்கவாசகம் மற்றும் மதுரை, சிவகங்கை, திருநெல்வேலியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியில் செல்பர்கள் முன்னெரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *SHARE பண்ணுங்க*
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (அக்.29) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பரமக்குடியில் 2,54,316 வாக்காளர்களும், திருவாடானை 2,96,606, இராமநாதபுரம் 3,20,241, முதுகுளத்தூர் 3,13,838, மூன்றாம் பாலினத்தவர்கள் 66 என இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 11,85,001 வாக்காளர் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார் .
பசும்பொன்னில் நாளை (அக்.,30) முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவில் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் H.ராஜா மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். எனவே நாளை காலை 10 மணிக்கு பார்த்திபனூர் மருச்சுக்கட்டி என்ற இடத்தில் ராம்நாடு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்க இருக்கிறது. இதில் பாஜக தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு தரணி முருகேசன் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜயின் பூர்வீக கிராமமான இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கிராமத்தில் அவர் தாத்தா சேனாதிபதியின் கல்லறை உள்ளது. 1982ல் சேனாதிபதி இறந்த பின் கல்லறையில் வழிபாடு செய்வதற்காக விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆண்டிற்கு இரு முறையாவது வந்து செல்வதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் சொல்கிறார்கள். விஜயின் பூர்வீக கிராமம் முத்துப்பேட்டை என்பதை அறிந்த பலர் தற்போது அங்கு சென்று வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.