India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு வேண்டிய உத்யம் பதிவு சான்றிதழை மாவட்ட தொழில் மையம் மூலமாக இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு உத்யம் சான்றிதழ் மூலம் எளிதாக பெறலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 13.11.2024 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலம் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழகர்கள் கலைஞர்கள் சான்றோர்கள் ஆகியோர்களின் சிறந்தவர்களுக்கான 2024-2025 ஆண்டுக்கான அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதற்கு விண்ணப்பிக்க வருகின்ற 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதற்கான விண்ணப்பத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலம் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழகர்கள் கலைஞர்கள் சான்றோர்கள் ஆகியோர்களின் சிறந்தவர்களுக்கான 2024-2025 ஆண்டு திருவள்ளுவர் திருநாளில் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதற்கு விண்ணப்பிக்க வருகின்ற 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதற்கான விண்ணப்பத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவிப்ப
கீரனூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட கீரனூர், விராலிமலை, குண்டாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை, மாத்தூர், தொண்டைமான்நல்லூர் ஆகிய பகுதிகளில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (நவ.14) 11 மணி முதல் மதியம் 1 மணி வரை புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தலைமையில் கீரனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
ஆலங்குடி அருகே கும்பங்குளம் பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், ஆலங்குடி காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, முகமது சாஸும், இளஞ்சேரன், இப்ராம்சா ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பின்னர் 3 பேரையும் கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 11 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 பேரில் 11 பேர் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளதால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டனர். இதில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளை கலெக்டர் அருணா நேற்று வழங்கினார். மேலும் மாவட்டத்தில் உள்ள சீர்மரபினர் இன மக்களின் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக 565 பேர் உள்ளனர். மேலும் 800 நபர்களுக்கு சீர்மரபினர் உறுப்பினர்களாக பதிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதுகை அருகே திருக்கட்டளை காட்டுப்பகுதியில் அனுமதியின்றி சேவல்சண்டை நடப்பதாக கணேஷ் நகர் போலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலிஸார் சேவல்சண்டையில் ஈடுபட்டிருந்த 15 பேரை விரட்டிபிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட டூவீலர்கள், கைப்பேசிகள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் ரூ 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பந்தயம் கட்டி போட்டி நடத்தியது தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (11.10.2024) திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கலந்துகொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.