Pudukkottai

News January 27, 2025

கீரனூரில் இளைஞர் போக்சோவில் கைது

image

விராலிமலையை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் டூ படித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோடை விடுமுறையின் போது சிறுமியின் அத்தை மகன் சுந்தரமூர்த்தி (36), சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் நேற்று கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சுந்தரமூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 27, 2025

விராலிமலையில் இளம் மருத்துவர் மரணம்

image

விராலிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட MK மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவராக பணிபுரியும் பிரகாஷ் (37). இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி நிஷா (36) அளித்த புகாரின் அடிப்படையில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News January 26, 2025

வேங்கை வயலில் 2 வது நாளாக மக்கள் போராட்டம்!

image

வேங்கைவயல் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்க செய்யப்பட்டுள்ள நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News January 26, 2025

350 கோடி கிரிப்டோ மோசடியில் புதுகை நபரிடம் விசாரணை

image

இந்தியா முழுவதும் 350 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் புத்துகையை சேர்ந்த நபர் ஒருவர் உள்பட 8 பேர் மீது சிபிஐ வழக்கு செய்துள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத சிபிஐ நேற்று முதல் புதுகை சேர்ந்த நபரிடம் விசாரணை செய்து வருகிறது. இந்தியாவில் நேற்று 10 இடங்களில் சோதனை நடந்துள்ளது. சமூக வலைதளம் ஆன்லைன் என பல பெயர்களில் இந்த மோசடி நடந்துள்ளது. 

News January 26, 2025

புதுகையில் சிறப்பு மருத்துவ முகாம்

image

புதுகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 19-ந் தேதி வரை நடக்கிறது. 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற உள்ளது. இம்முகாமில் தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 25, 2025

சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு நெஞ்சுவலி 

image

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சரும் திருமயம் தொகுதி எம்எல்ஏவுமான ரகுபதி அவர்களுக்கு திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட இருந்த நிலையில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் விமான நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அமைச்சர் பூரண நலத்துடன் இருப்பதாக மருத்துவர் தகவல்.

News January 25, 2025

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை

image

மாவட்டத்தில் படித்து வேலையில்லாத இளைஞர்களுக்காக அரசால் வழங்கப்படும் 10 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ 200 ம், தேர்ச்சியுற்றவர்களுக்கு ரூ 300 ம், 12 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. இதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

அறந்தாங்கி மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி

image

பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்த சக்தி சோமையா 14 இவன் காரைக்குடி பொய்யா வயல் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த சக்தி சோமையா கம்ப்யூட்டர் வகுப்புக்கான பள்ளியில் இருந்த கணினி சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.  இதுகுறித்து தந்தை கைலாசம் கொடுத்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2025

புதுகையில் இன்று குறைதீர் கூட்டம்

image

புதுகை மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை தொடர்பான குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் சென்று குடும்ப அட்டைகள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல், செல்போன் எண் மாற்றம் ஆகியவை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்புள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதில் முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை பழி வாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

error: Content is protected !!