Pudukkottai

News January 30, 2025

காரையூர் அருகே புதுப்பெண் மாயம்

image

காரையூர் அருகே உள்ள ஆதினிப்பட்டியை சேர்ந்தவர் தேன்மொழி (20). இவர் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த நிலையில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. நாளை (ஜன.31) நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், தேன்மொழி திடீரென மாயமானார். இதனையடுத்து அவரது தந்தை பெருமாள அளித்த புகாரின் பேரில் போலீசார் தேன்மொழி எங்கே சென்றார், பெண் கடத்தலா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 29, 2025

தவெக மத்திய மாவட்ட செயலாளர் அறிவிப்பு

image

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (ஜன.29) புதுக்கோட்டை நான்காவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜாபர் பர்வேஷ், புதுக்கோட்டை மத்திய தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளராக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் ஜாபர் பர்வேஷ்க்கு கட்சியின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News January 29, 2025

அன்னவாசல் நாளை இலவசமருத்துவ முகாம் 

image

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தனியார் மருத்துவமனை மற்றும் அன்னவாசல் ஜமாத் இணைந்து சமயநல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தும் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நாளை 30-01-2025 வியாழக்கிழமை JK திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில்  சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 29, 2025

புதுகை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், திருப்புனவாசல், கரூர், பொன்பேத்தி,அரசர்குளம், சுப்ரமணியபுரம், திருவாப்பாடி விராலிப்பட்டி உள்ளிட்ட பிற துணை மின் நிலையங்களில் நாளை(ஜன.30) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 29, 2025

வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் இன்று திறப்பு

image

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின்  காணொலி காட்சி வாயிலாக, இன்று காலை 10.15 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம், வல்லநாடு மற்றும் மலையூர் ஆகிய இடங்களில், புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்களை திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடு பணிகள் நடந்து முடிந்தது.

News January 28, 2025

விராலிமலை அருகே வாகனம் மோதி ஒருவர் பலி

image

விராலிமலை தாலுகா பெரிச்சிப்பட்டியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (60). இவர் பெரிச்சிப்பட்டி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அய்யாக்கண்ணு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 28, 2025

விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ. 5 ½ கோடி 

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 155 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து இதுவரை கொள்முதல் செய்த நெல்லுக்கு உண்டான தொகையான ரூ. 5 கோடியே 43 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News January 28, 2025

புதுகையில் 6 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

திருமயம் அருகே கல்குவாரிகளில் முறைகேடு நடப்பது தொடர்பாக புகார் தெரிவித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதுகை மாவட்டத்தின் நிர்வாக நலன் கருதி திருமயம் தாசில்தார் உட்பட 6 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஆட்சியர் அருணா நேற்று உத்தரவிட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 27, 2025

திருமயம் வட்டாட்சியர் புவியரசன் பணியிடை மாற்றம்

image

திருமயம் அருகே ஜகபர் அலி கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏற்கனவே திருமயம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது தாசில்தார் புவியரசன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமயத்தில் புதிய தாசில்தாராக ஆலங்குடி தனி வட்டாட்சியர் ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

News January 27, 2025

மாற்றுத்திறன் மாணவர் மதிப்பீட்டு முகாம் 

image

18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை அரசு ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்குகிறது. பின்னர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பிப்.19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை குடும்ப அட்டையுடன் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!