India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு, ஆலங்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் இன்று (26.11.2024) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. ஷேர் செய்யவும்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் அடிக்கடி வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்ததையடுத்து இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு துப்பு துலக்கிய போலிஸார் வாகனங்களை திருடிய வரிசைமுகமது(23), தாரணி(20), ஜீவா(எ) கணேசன் ஆகிய 3 பேரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 8 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
ஆலங்குடி மற்றும் வடகாடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (நவ 26) நடைபெற உள்ளது. இதனையொட்டி, பாச்சிக்கோட்டை, களபம், ஆலங்குடி, குப்பக்குடி, வெட்டன்விடுதி, கோட்டைக்காடு, மாங்கோட்டை, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என ஆலங்குடி உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கடந்த 16,17- ந் தேதிகளிலும் நேற்று முன்தினம், நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மொத்தம் 24,869 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கந்தர்வகோட்டை பெரிய கோட்டையை சேர்ந்தவர் கலைச்செல்வன் இவரது மகன் 4 வயது ஆண் குழந்தை நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார் வீரடிப்பட்டி சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த மகேந்திரா பொலிரோ வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சாய்பிரணவ் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (நவ.25) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை எக்ஸ்பிரஸ், ஆதனக்கோட்டை முழுப் பகுதியும், புதுப்பட்டி முழுப் பகுதியும், பழையகோட்டை முழு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசலில் புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டையில் இருந்து வந்து கொண்டிருந்த ஷாஜகான் என்ற இளைஞர் மீது மோதியதில் ஷாஜகான் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின் பேரில் விரைந்து வந்த திருமயம் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ரூ.35.79 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ஊழல் மற்றும் கண்காணிப்பு போலீசாரால் தொடரப்பட்ட வழக்கு நேற்று மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.கிரிஜா ராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பிலும் வழக்குரைஞர்கள் இன்று ஆஜராகி வாதாடிய நிலையில் நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 18 க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.