Pondicherry

News January 1, 2025

முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏக்கள்

image

ஆங்கில புத்தாண்டு தினமான இன்று முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், சபாநாயகர் செல்வம், எம்.பி. செல்வகணபதி ஆகியோருக்கு அரசு கொறடா V.ஆறுமுகம் , சட்டமன்ற உறுப்பினர்கள் U.லட்சுமிகாந்தன், R.பாஸ்கர், தட்சணாமூர்த்தி  மற்றும் ரமேஷ் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News January 1, 2025

துணைநிலை ஆளுநருக்கு சபாநாயகர் புத்தாண்டு வாழ்த்து

image

புதுச்சேரி மணவெளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான செல்வம் இன்று ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து பொன்னாடை போத்தி, பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பாஜக எம்எல்ஏக்கள், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.

News January 1, 2025

புதுவை: கழிப்பிடங்களை பார்வையிட்ட எம்எல்ஏ

image

புதுச்சேரி நகராட்சி டாக்டருடன் எம்எல்ஏ கழிப்பிடங்களை பார்வையிட்டார். நாடு முழுவதும் உள்ள கழிப்பிடங்களை புதுப்பிக்க ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரி மற்றும் நகராட்சிகளில் உள்ள 90 பொது மற்றும் சமுதாய கழிப்பிடங்களில் ரூ.2 கோடி செலவில் புதுப்பித்து நவீனமயமாக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. உடன் உதவி பொறியாளர்கள் இருந்தனர்

News January 1, 2025

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

image

புதுச்சேரியில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தப் பட்டதையடுத்து லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்தது. புதுச்சேரியில் ரூ.94.26-ல் இருந்து ரூ.96.24 எனவும், காரைக்காலில் ரூ. 94.03-ல் இருந்து 96.03க்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் டீசல் விலையும் 2 ரூபாய் உயர்ந்து புதுச்சேரியில் ரூ. 86.47 எனவும், காரைக்காலில் ரூ.84.35 என உயர்த்தப்பட்டுள்ளது.

News January 1, 2025

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீசார் தடியடி

image

புதுச்சேரி கடற்கரை சாலையில் நள்ளிரவு 12:30 மணிக்கு மேல் கூடியிருந்த கூட்டத்தை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். முன்னதாக குடிபோதையில் கடற்கரைக்கு வந்த வாலிபர்களையும் போலீசார் விரட்டினர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நகர பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் தீவிரப்படுத்தி இருந்தனர்.

News December 31, 2024

அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்த சிறுமி திடீர் சாவு

image

ஒடிசா மாநிலம் மகஜன்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வர். இவரது மகள் சோனாக்ஷிலெங்கா (வயது 15). மாற்றுத்திறனாளி. அரவிந்தரின் தீவிர பக்தர்களான இவர்கள் கடந்த 25-ந்தேதி புதுச்சேரி வந்து அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் சோனாக்ஷிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 31, 2024

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் சிறை தண்டனை

image

புதுச்சேரி தெற்கு போக்குவரத்து எஸ்.பி. நேற்று செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 199(ஏ)- கீழ் சிறுவனின், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது, வாகனத்தின் உரிமையாளருக்கு 3 மாதம் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். ஷேர் செய்யவும்

News December 31, 2024

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புத்தாண்டு வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இந்தப் புதிய ஆண்டு உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நீங்கள் விரும்பும் அனைத்தையும் கொண்டு வருவதாக அமையட்டும். உங்கள் வாழ்வின் பாதை அன்பாலும் வெற்றியாலும் திரப்பப்பட்ட்டும் என்று கூறி அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்

News December 31, 2024

புதுச்சேரியில் இன்று போக்குவரத்து மாற்றம்

image

புதுச்சேரி போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புத்தாண்டையொட்டி இன்று மதியம் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை
நகரப் பகுதிகளில் கனரக வாகனங்கள் இயக்கவும் சாலையில் வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் கடலூர் விழுப்புரம் சாலை சந்திப்பு இந்திரா காந்தி சதுக்கம் ராஜீவ் காந்தி சதுக்கம் ஈசிஆர் வழியாக செல்ல வேண்டும்

News December 31, 2024

புதுவை: ஒயிட் டவுன்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை

image

புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பணி ஒதுக்கீடு குறித்த விளக்ககூட்டம், ஆசிரமம் ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.ஐ.ஜி., அஜித்குமார் சிங் தலைமையில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.க்கள் கலைவாணன், நாரா சைதன்யா, பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.இதில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது.

error: Content is protected !!