India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை எச்.எம்.பி.வி., பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் நிலவும் ஜலதோஷம், சுவாசநோய்த் தொற்றுக்களின் தரவுகளை ஆய்வு சுகாதாரத்துறை செய்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் இருமல் அல்லது தும்மும் போது கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் உங்கள் வாய் மற்றும் மூக்கை நன்றாக மூடவும் என தெரிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
புதுச்சேரியில் உள்ள மணவெளி சட்டமன்ற தொகுதியில் ரூ. 64.38 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான செல்வம் அவர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
புதுவை அரசு மின்துறை சார்பு செயலர் சிவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்மார்ட் மீட்டரை பிரீபெய்டு முறையில் இல்லாமல் தொடக்கத்தில் போஸ்ட் பெய்டு முறையில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் விருப்ப அடிப்படையில் பிரீபெய்டு முறைக்கு மாறுவதை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, அரியூர் பாரதி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். என்.ஆர்.காங்., பிரமுகரான இவர், அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் ஆதரவாளர். துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வேல்முருகன் 3 நண்பருடன் சாலையில் வாக்கிங் செல்லும் போது சாலையில் வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ் பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செல்போன் சர்வீஸ் செய்யும் பொழுது பெண்கள் தங்களுடைய புகைப்படங்களை மற்றவர்கள் திருடும் வாய்ப்பு இருப்பதால்இது போன்ற புகைப்படங்களை செல்போனில் சேமித்து வைக்க வேண்டும் இது போன்ற தனிப்பட்ட நபர்களின் புகைப்படங்களை சம்பந்தப்பட்டவர்கள் அனுமதி இல்லாமல் உபயோகப்படுத்தினால் வழக்கு பதிவு சிறையில் அடைக்கப்படுவர்
புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது 2கட்ட கலந்தாய்வு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் காலி இடங்கள் அதிகமாக இருப்பதால் இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுப்படி நீட் கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
புதுவை அரசு நலவழித்துறை தரப்பில் எச்எம்பிவி பாதிப்பு பற்றி நேற்று கூறுகையில் சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) நோய் பரவுவது குறித்து இந்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது மற்ற சுவாச வைரஸ் போன்றது, இது குளிர்காலத்தில் பொதுவான குளிர் & காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. புதுவை மாநிலத்தில் இதுவரை எச்எம்பிவி பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று புதுவை அரசு தெரிவித்துள்ளது.
புதுவை அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி & விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி- 2025, ஜன.20 முதல் 26-ஆம் தேதி வரை, கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டப வளாகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க உள்ளூா் & வெளியூா் பதிப்பாளா்கள், விற்பனையாளர்கள் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுடன் ஜன.13- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தமிழக கவர்னர் திட்டமிட்டு வெளிநடப்பு செய்து ஜனநாயக படுகொலை செய்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதையை கொடுக்க தவறிவிட்டார். இதனால் ஜனாதிபதி கவர்னர் பதவியிலிருந்து ரவியை நீக்க வேண்டும். தமிழகத்திற்கு புதிய கவர்னரை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.