Pondicherry

News March 26, 2026

புதுச்சேரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை – 5 ஆண்டு சிறை

image

புதுச்சேரியில் 2023ம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முத்திரையர்பாளையம் அந்தோணி ராஜ் (66) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம், குற்றம் நிரூபணமாகியதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க புதுச்சேரி அரசுக்கு நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.

News March 26, 2026

புதுச்சேரி: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

புதுச்சேரி மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <>இங்கு <<>>க்ளிக் செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும். இனி தேவையில்லாத FINE விழுகாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

News March 26, 2026

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் போட்டியில் 365 பேர்

image

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனு திரும்பப் பெறும் அவகாசம் இன்று பிற்பகலில் நிறைவடைந்தது. இதையடுத்து காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், பாஜக, திமுக, டிவிகே, அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 365 பேர் இறுதியாக தேர்தல் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

News March 26, 2026

புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் நேரடி மோதல்

image

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு வாபஸ் பெறும் காலக்கெடு, இன்று மாலை 3.00 மணி நிறைவடைந்தது. இதன் பின்னர், கூட்டணியில் குழப்பம் நீடிப்பது வெளிப்பட்டுள்ளது. திமுக போட்டியிடும் 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை திரும்பப்பெறாமல் போட்டியில் நீடிக்கின்றனர். இதனால், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

News March 26, 2026

புதுச்சேரி: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12ஆவது வரை இருக்க வேண்டும். <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க பெயர், முகவரி விவரம் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..!

News March 26, 2026

புதுச்சேரியில் கூட்டணி கட்சிகளுக்குள் மோதல்

image

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால், கூட்டணி கட்சிகளுக்குள் மோதல் சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் சார்பில் 6 தொகுதிகளில் மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள், மனுக்களை திரும்பப் பெற மறுத்ததால் சிக்கல் தீவிரமடைந்துள்ளது. இதன் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

News March 26, 2026

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் நீடிக்கும் குழப்பம்

image

சட்டமன்ற தேர்தலில் வேப்பமனுதாக்கல் வாபஸ் பெரும் காலம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பாக களம் காணும் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்கள் ஐந்து தொகுதிகளில் நேரடி போட்டியிடுகின்றனர். அதேபோன்று உழவர்கரை தொகுதி விசிகாவுக்கு ஒதுக்கப்பட்டது, ஆனால் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் பெறவில்லை, ஆக மொத்தம் புதுச்சேரியில் ஆறு தொகுதியில் கூட்டணி குழப்பம் உள்ளது.

News March 26, 2026

புதுச்சேரி: 4 தொகுதிகளில் சசிகலா கட்சி போட்டி

image

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வி.கே. சசிகலா தொடங்கிய புதிய கட்சி தேர்தல் களத்தில் குதித்துள்ளது. இக்கட்சியினர் நான்கு முக்கிய தொகுதிகளில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். போட்டியிடும் தொகுதிகள், நெட்டப்பாக்கம், வில்லியனூர், உழவர்கரை, இந்திரா நகர். இதன் மூலம் புதுச்சேரி அரசியல் களத்தில் புதிய மாற்றத்திற்கான முன்னோட்டம் உருவாகியுள்ளது.

News March 26, 2026

புதுவை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

புதுவை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News March 26, 2026

புதுச்சேரி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

புதுச்சேரியில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் துறை வெளியிட்டுள்ளது. இதில் புதிதாக 6,100 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்டவர்களில் 2,766 ஆண்கள், 3,333 பெண்கள் மற்றும் ஒருவர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6,100 பேர் உள்ளனர். தற்போது புதுச்சேரி மாநிலத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9,50,311 ஆகும்.

error: Content is protected !!