India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசு அறிவித்தபடி, நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து சிவப்பு நிற குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும், 20 கிலோ இலவச அரிசி மற்றும் அனைத்து மஞ்சள் நிற குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி மீண்டும் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். ஷேர் செய்யவும்
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று கூறுகையில், ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என மர்மநபர்கள் தொடர்பு கொண்டு ஆசைவார்த்தை கூறினால், அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். பங்குசந்தையில் முதலீடு செய்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருவது தொடர்கதையாக உள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் மோசடி கும்பலிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
புதுச்சேரியில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, கொள்ளை, சங்கிலி பறிப்பு, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. சீனியர் எஸ்பி கலைவாணன் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட போலீசாரை பாராட்டினார்.
சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க இருசக்கர வாகனங்களில் செல்பவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அணியாமல் சென்றால், ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இளைஞர்கள், தங்களது ஆற்றல், வலிமை மற்றும் படைப்பாற்றலினால் எதையும் வெல்ல முடியும். மாற்றத்திற்கான மகத்தான சக்தியாக விளங்கும் இளைய சமுதாயத்தை ஊக்குவிப்போம் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அனைவருக்கும் தேசிய இளைஞர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்த ஐந்து வயது சிறுமி காய்ச்சல் காரணமாக கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவருக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் தொற்று இல்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒருவருக்குக்கு தொற்று என்ற செய்தி வந்துள்ளது.
உருளையன்பேட்டை போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பு அருகே சந்தேகத்திடமாக நின்றிருந்த ஸ்கார்பியோ காரை சோதனை செய்தனர். காரில் 80 அட்டை பெட்டிகளில் ரூ. 2.86 லட்சம் மதிப்புள்ள 2,388 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. நாமக்கல்லைச் சேர்ந்த சுரேஷ் டிரைவரை போலீசார் நேற்று கைது செய்து, மதுபான பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி சீனியர் எஸ் பி கலைவாணன் நேற்று கூறும் பொழுது புதுச்சேரியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த அவசர கால உதவிக்கு பயன்படுத்தும் 4 வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். அனைத்து போலீஸ் நிலையத்திலும் பீட், மொபைல் பேட்ரோல் தீவிரப்படுத்தப்படும். கடந்த ஆண்டு 2023 ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு கொலை, வழிப்பறி குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்
புதுச்சேரி சின்னையன்பேட்டையைச் சோ்ந்தவா் சங்கா்(எ) பரணியின் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் சங்கா், அவரது மனைவி சித்ரா ஆகியோரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம், கைப்பேசிகளைத் திருடிச் சென்றனர். புகார் படி வழக்கு பதிந்த போலீசார் மூளக்குளத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் வாணரப்பேட்டையைச் சோ்ந்த நிவாஸ் அனிச்சம்குப்பத்தைச் சேர்ந்த சூரி ஆகியோரை கோரிமேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் புதுச்சேரியில் நிலவி வரும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், மதுபான விற்பனை நிலையங்களுக்கான கலால் வரி மற்றும் உரிம கட்டணத்தை உயர்த்த முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.