India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் புதுச்சேரி கடல் பகுதிகளில் ஹூக்கான் (எ) அக்டி முறை (சுருக்குமடி வலை) மீன்பிடி முறையை பயன்படுத்த கூடாதுஎன எச்சரிக்கை விடப்படுகிறது. மீறினால், மீனவர்களின் நலத்திட்ட உதவிகள் நிருத்தப்படும். மேலும் அவர்கள் மீது மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் 2008ன் படி நடவடிக்கை எடுப்பதோடு, மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்
புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 13 ஸ்டோர் கீப்பர் பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு, தற்போது பணி செய்யும் பல்நோக்கு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருக்க வேண்டும்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடைந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளுக்கு ஈடாக தலா ரூ.1,000/- வீதம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது இதன் மூலம் சுமார் 1,29,886 பயனாளிகள் பயன் பெற்றனர் என்று அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் மணவெளி தொகுதியைச் சேர்ந்த விதவை, முதியோர் முதிர்கன்னி கணவனால் கைவிடப்பட்டவர் ஆகிய 170 பயனாளிகளுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் அரசாணைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் இன்று தவளக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் வழங்கினார்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொருட்கள் வாங்க புதுவை கடைவீதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதில் நேற்று இரவு முதல் நேரு வீதியில் இருசக்கர வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆட்டோ கார் உள்ளிட்ட வாகனங்கள் நேரு வீதி தொடக்கத்திலேயே பேரிகார்டு மூலம் தடுப்புகளை அமைத்து போலீசார் திருப்பி அனுப்பினர்.
புதுச்சேரி நகரப் பகுதி சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு நேற்று முன்தினம் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது மேலும் புதுவையை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு தொற்று அறிகுறி இருந்தது அந்த சிறுமியின் சளி மாதிரி எடுத்து எச்.எம்.பி.வி. தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் புதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தமிழர்களின் வாழ்வியல் அம்சங்களை அங்கமாகக் கொண்ட பொங்கல் பண்டிகையின் வாயிலாக இயற்கை வளங்களைப் போற்றி, நம் முன்னோர்களுக்கு நன்றியை வெளிப்படுத்துவதோடு, எதிர்கால சந்ததியினருக்கும் நமது பாரம்பரியத்தைக் கொண்டு செல்கிறோம்.புதுப்பானையில் பொங்கி வரும் புத்தரிசிப் பொங்கலாய் பொங்கிப் பெருகட்டும் என்றார்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் புதுச்சேரி அரசு அறிவிப்பின்படி, நேற்று முதல் அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும், ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜிப்மர் முழு ஆதரவு அளிக்கிறது
ஹெல்மெட் அணிவதால், தலைக்கு ஏற்படும் அபாயத்தை, 20 சதவீதம் மற்றும் இறப்பிற்கான வாய்ப்பை 40 சதவீதம் வரை குறைக்க முடியும்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள போகி வாழ்த்துச் செய்தியில், அல்லன யாவையும் அகற்றி நல்லன யாவையும் நெஞ்சினில் நிறுத்தி அகிலம் முழுவதும் அன்பைப் பரப்புவோம். சுற்றுச்சூழலுக்கு விளைவிக்காத போகியைக் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் போகி பண்டிகை நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் மதுபான ஆலை உரிமத்தைப் பெற ஆளுநர் அனுமதி இல்லாமல் முதல்கட்ட கடிதத்தை 8 கம்பெனிகளுக்கு தந்துள்ளதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.