Pondicherry

News January 16, 2025

புதுச்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

புதுச்சேரியில் பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவு குவிந்துள்ளனர் இதன் காரணமாக புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் திப்ராயபேட்டை யில் உள்ள பாண்டி மெரினாவிற்கு செல்லும் சாலையில் இன்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போக்குவரத்து போலிசாரும் தன்னார் வளர்களாலும் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்

News January 15, 2025

புதுவை: சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் பங்கேற்பு

image

புதுச்சேரியில் உள்ள உழவர்கரை தொகுதி பாஜக சார்பில் தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பகுதியில் பாஜக மாநில செயலாளர் சரவணன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழாவில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தூய்மை பணியாளர்களுடன் கலந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்.

News January 15, 2025

புதுவை: திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

image

தெய்வப்புலவர் திருவள்ளுவர் தின விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று (15.01.2025) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம், R, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News January 15, 2025

வெளிநாட்டு பார்சல்  – ரூ.5.80 லட்சம் மோசடி

image

புதுச்சேரி திலாஸ்பேட்டையை சேர்ந்த மேரி ஜூலி. இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், சென்னை ஏர்போர்ட் சுங்கவரி அதிகாரி பேசுவதாக கூறி, தங்களுடைய பேரில் வெளிநாட்டில் இருந்து 70 ஆயிரம் டாலர் மதிப்பிலான பார்சல் வந்துள்ளது.அந்த பார்சலை பெறுவதற்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதைநம்பிய மேரி ஜூலி ரூ.5.80 லட்சத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். அவர் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்

News January 15, 2025

பல்கலையில் மர்ம நபர்கள் அத்துமீறல் 

image

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தேசிய பொறுப்பாளர் கிருத்திகா நேற்று லாஸ்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலையில் அத்துமீறி நுழைந்த 4 நபர்கள் அங்கு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த முதலாமாண்டு மாணவியிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் பாலியல் தொல்லை தர முயன்றுள்ளனர். இதுகுறித்து பெண் ஐ.பி.எஸ் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த கோரிக்கை வைத்தார்.

News January 15, 2025

பன்றிகளை திரியவிட்டால் நடவடிக்கை என்று எச்சரிக்கை

image

புதுவை ஆணையர் ரமேஷ் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில். வில்லியனுார் நகர பிரதான சாலைகள் & அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. எனவே பன்றி வளர்ப்போர் தங்கள் கண்காணிப்பில் பட்டியில் அடைத்து வளர்க்க வேண்டும். தவறினால் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News January 14, 2025

திருவள்ளுவர் தினம் -புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

image

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகிற்கு தந்த தெய்வப் புலவர் வள்ளுவர் பிறந்த இந்நாளில், அவர் காட்டிய நன்னெறிகளை நெஞ்சில் நிறுத்தி எந்நாளும் கடைபிடிப்போம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

News January 14, 2025

புதுச்சேரி கவர்னருக்கு சபாநாயகர் வாழ்த்து

image

தமிழர் திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் இன்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் நேரில் சந்தித்து பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். அது துணைநிலை ஆளுநரின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News January 14, 2025

புதுச்சேரியில் நாளை இறைச்சி விற்க தடை

image

உழவர்கரை நகராட்சி ஆணைர் சுரேஷ்ராஜ், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருவள்ளுவர் தினம் நாளை (15ம் தேதி) கொண்டப்படுகிறது. அதனால், உழவர்கரை நகராட்சி பகுதிகள் மற்றும் வில்லியனுார் கொம்யூனுக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி மீன் மற்றும் இதர மாமிச விற்பனை அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது மீறினால் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

News January 14, 2025

சுருக்குமடி வலைக்கு தடை -மீன்வளத்துறை எச்சரிக்கை

image

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் புதுச்சேரி கடல் பகுதிகளில் ஹூக்கான் (எ) அக்டி முறை (சுருக்குமடி வலை) மீன்பிடி முறையை பயன்படுத்த கூடாதுஎன எச்சரிக்கை விடப்படுகிறது. மீறினால், மீனவர்களின் நலத்திட்ட உதவிகள் நிருத்தப்படும். மேலும் அவர்கள் மீது மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் 2008ன் படி நடவடிக்கை எடுப்பதோடு, மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்

error: Content is protected !!