Pondicherry

News January 18, 2025

புதுவை: சிறுநீர் கழித்ததை கண்டித்தவருக்கு கத்தி குத்து

image

புதுச்சேரி பிரியதர்ஷினி நகரை சேர்ந்த அருண்(27). எதிர் வீட்டை சேர்ந்த மணி வீட்டு வாசல் சாலையில் சிறுநீர் கழித்ததை கண்டித்ததால் மணி உறவினர் பிரதாப் என்பருடன் சேர்ந்து அருணை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து மணி பிரதாப் இருவரையும் தேடி வருகின்றனர்.

News January 18, 2025

கலாச்சார மையத்தில் முதலமைச்சர் ஆய்வு

image

புதுச்சேரி ஆளுநர் மாளிகை கட்டடம் அதன் உறுதித் தன்மையை இழந்ததால் பாதுகாப்பு கருதி ஆளுநர் மாளிகை கடற்கரைச் சாலையில் உள்ள கலாச்சார மையத்துக்கு மாற்றப்படவுள்ளது. இதையடுத்து, கலாச்சார மையக் கட்டடத்தில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், முதல்வர் ரங்கசாமி கலாச்சார மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.

News January 18, 2025

புதுவை: அதிகாரிகளை கடிந்த முதலமைச்சர் ரங்கசாமி

image

250 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகை, உறுதித்தன்மையை இழந்ததால் இடம் மாற்றம் செய்ய பொதுப்பணித்துறை, அரசுக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் ஆளுநர் மாளிகை புனரமைக்க, வேறு இடத்திற்கு ஆளுநர் மாளிகையை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அந்த பணி காலதாமதமாகி வருவதால் முதலமைச்சர் ரங்கசாமி, அதிகாரிகளை கடிந்து கொண்டு, விரைவாக பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.

News January 17, 2025

நாளை பொதுமக்கள் குறை தீர்வு முகாம் ரத்து

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொங்கல் பண்டிகையின் 5-ஆவது நாளான நாளை சோரியாங்குப்பம், மணமேடு, கரையாம்புத்தூர் பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா நடைபெறுகிறது இதனை எடுத்து காவல் நிலையங்களில் நாளை நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு முகாம் ரத்து செய்யப்பட்டதாகவும் அடுத்த வாரம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்

News January 17, 2025

சொன்னதை செய்யும் அரசாக இருக்கும்: புதுவை முதல்வர்

image

காரைக்கால் கார்னிவல் விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியபோது:- இந்த அரசானது மக்களுக்காக செயல்படும் அரசாகும். இதில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அரசின் என்னமாக உள்ளது. மேலும் சொன்னதை செய்யும் அரசாக இருக்கும் வகையில் வாக்குறுதி அளித்தபடி ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அரிசி வழங்கப்பட்டு வருகின்றன எனவும், இனி ரேஷன் கடைகள் திறந்தே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

News January 17, 2025

புதுவை: நிதி உதவி ரூ.20,000 ஆக உயர்வு! 

image

புதுவையில் முதியோர் பென்ஷன் வாங்குவோர் இறந்துவிட்டால், ஈமச்சடங்கு நிதியாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை வாயிலாக ரூ.15,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஈமச்சடங்கு தொகையை, தற்போது,ரூ. 20,000 உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை வாயிலாக அரசாணை பிறப்பித்துள்ளது.

News January 17, 2025

புதுச்சேரியில் நாளை ஆற்றுத் திருவிழா

image

பொங்கல் பண்டிகையின் 5-ஆவது நாளில் சோரியாங்குப்பம், மணமேடு, கரையாம்புத்தூர் பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதை ஆண்டு, ஜன.18 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆற்றுத் திருவிழாவில் சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் பாகூா், குருவிநத்தம்,சோரியாங்குப்பம், அரங்கனூா், சேலியமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.

News January 17, 2025

புதுச்சேரியில் கலை விழா இன்று தொடக்கம்

image

பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், சுற்றுலாத் துறை சாா்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி திடலில் ஜனவரி 17,18 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கலை விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில், திரைப்பட பின்னணி பாடகா்கள் மாலதி லக்ஷ்மணன், முகேஷ், நாட்டுப்புற இசைக் கலைஞா்கள் சின்னப்பொன்னு, வேல்முருகன் மற்றும் பல்சுவை கலைஞா்கள் பங்கேற்கின்றனா்.

News January 17, 2025

காரைக்காலில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடக்கம்

image

காரைக்கால் கார்னிவல் விழா தொடக்க நிகழ்வில் புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதாந்திர இலவச அரிசி வழங்கும் திட்டத்தை புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் திருமுருகன், ஜெயக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

News January 16, 2025

வேலை கிடைக்காததால் கடலில் குதித்து வாலிபர் தற்கொலை

image

புதுச்சேரி முத்தியால்பேட்டை, துரை கணேசன் மகன் தரணிதரன் (33). டி.எம்.எல்.டி., படித்து வேலை தேடி வந்தார். வேலை கிடைக்காததால் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இதனால் அவர் கடலில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!