Pondicherry

News January 20, 2025

புதுச்சேரியில் வெடித்து சிதறியது நாட்டு வெடிகுண்டா?

image

புதுச்சேரி, கோவிந்தசாலை, வாஞ்சிநாதன் வீதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே, நேற்று திடீரென அதிக சத்தத்துடன் கூடிய மர்ம பொருள் வெடித்து சிதறியது. தகவலறிந்த பெரியக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சாலையில் வெடித்து சிதறியது நாட்டு வெடிகுண்டா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News January 20, 2025

புதுச்சேரியில் மது அருந்திய நபர் பலி: போலீசார் விசாரணை

image

கூடப்பாக்கம், தாமரைக்குளம் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக்கேயன். கொத்தனாராக பணிபுரியும் இவர் குடிப்பழக்கம் காரணமாக சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கூட்பாக்கம் மந்தைவெளி திடலில் அமர்ந்து மது அருந்திய கார்த்திக்கேயன் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 20, 2025

நாராயணசாமி – வைத்திலிங்கம் திடீர் ஆலோசனை

image

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் அனைத்து தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் எல்லையம்மன் வீதியில் உள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டிற்கு நேற்று சென்ற காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் அவருடன் வியூகம் குறித்து தனியாக ஆலோசனை நடத்தினார். இது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

News January 19, 2025

Way2Newsல் புதுச்சேரி நிருபராக விருப்பமா?

image

Way2News Appல் புதுச்சேரி செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்யவும். நீங்கள் பள்ளி,கல்லூரியில் பணிபுரிபவரா? அரசு அலுவலரா? சமூக ஆர்வலரா? உங்கள் வேலை, பகுதி சார்ந்த நிகழ்வுகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டுங்கள். மேலும் விவரங்களுக்கு +9195429 22022 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

News January 19, 2025

புதுவையில் டிவிசேனல்களை இலவசமாக பார்க்கலாம்

image

புதுவை பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் செய்தி குறிப்பில், புதுச்சேரியில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பாக பி.ஐ டிவி என்ற சேவை சோதனை ஓட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி பிஎஸ்என்எல் மொபைல் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் 500+ தொலைக்காட்சி சேனல்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், திரைப்படங்களை பல்வேறு மொழிகளிலும் பார்க்க முடியும் என கூறியுள்ளார்.

News January 19, 2025

புதுவை: கனரா வங்கியின் பெயரில் போலி லிங்க்

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று கூறுகையில், கனரா வங்கி பெயரும் போலி லிங்க் வேகமாக பரவி வருகிறது. அந்த ஏ.பி.கே. கோப்பினை திறந்து, டவுன்லோடு செய்ததும், அடுத்த நிமிடமே கனரா வங்கியின் அதிகாரபூர்வமான குழுபோல், அந்த வாட்ஸ் அப் குழு நிறம் மாறி விடுகிறது. அத்துடன் அவர், எந்தந்த வாட்ஸ் அப் குழுக்களில் உள்ளாரோ அந்த குழுக்களிலும் அந்த போலி லிங்க் வேகமாக பரவி வருகிறது. 

News January 19, 2025

நெட்டப்பாக்கம் அருகே மாணவருக்கு வெட்டு

image

மதகடிப்பட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் 3ம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவர்கள் இருவருக்குள் கல்லுாரி கேண்டினில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு மாணவர், அவரின் நண்பர்கள் 10 பேர் சேர்ந்து, மற்றொரு மாணவரை நெட்டப்பாக்கத்திற்கு போன் செய்து, வரவழைத்து கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் படி 10 பேர் மீது நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து, தேடி வருகின்றனர்.

News January 19, 2025

25 மருத்துவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பணியிடங்கள் நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்எஸ், டிஎன்பி பட்டம் பெற்று 45 வயது உள்ளவர்கள் வருகிற 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கானநேர்காணல் 31ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2025

புதுச்சேரியில் பிரபல திருடன் கைது

image

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
பல்வேறு இடங்களில் கடைகளில் திருட்டு போனது இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர் இந்த நிலையில்
கடைகளை உடைத்து திருடிய பிரபல திருடன் குமார் @ ஓகை குமாரை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர் இந்த குற்றவாளி மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

News January 18, 2025

புதுச்சேரியில் மதுபானம் கடத்திய 4 பேர் கைது

image

புதுச்சேரி நெட்டப்பாக்கம் போலீசார் இன்று புதுச்சேரி எல்லையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு சொகுசு காரில் மதுபானம் கடத்திய 4 பேரை கைது செய்த நெட்டப்பாக்கம் போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!