Pondicherry

News January 22, 2025

மாணவர்கள் விரும்பும் உயர் கல்வியை உருவாக்கியுள்ளோம்

image

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் குழந்தைகள் புத்தக விளையாட்டு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, உயர்கல்வியில் மாணவர்கள் எந்த பாடத்தை விரும்பினாலும், அதை படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இடம் இல்லை என்ற நிலையே புதுச்சேரியில் இல்லை, மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்றார்.

News January 22, 2025

பல்கலை மாணவியிடம் அத்துமீறல்: முதல்வருடன் ஆலோசனை

image

முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் போலீஸ் டி.ஜி.பி. ஷாலினி சிங்கை புதுச்சேரி சட்டசபைக்கு இன்று  வரவழைத்தனர். இருவரும், தொழில்நுட்ப பல்கலையில் மாணவி மீதான தாக்குதல், வழக்கு விபரம், போலீஸ் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து இப்பிரச்னையில் கடும் நடவடிக்கை எடுக்கவும், தேடப்பட்டு வரும் நபரை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டனர்.

News January 22, 2025

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

image

புதுவை
முதலியார்பேட்டை போலீசார் கொம்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு கும்பல்- பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தது. போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில் அவர்கள் வில்லியனூர் ஜெகதீஷ் ஜெகன் ராம்குமார் பாஸ்கர் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்

News January 21, 2025

புதுச்சேரி மக்கள் வங்கி கணக்கில் ரொக்கம் வரவு

image

புதுச்சேரி அரசு, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு அக் & நவ ஆகிய 2 மாதங்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 20 கிலோ இலவச அரிசிக்கு ஈடாக ரூ.1,200, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 10 கிலோ இலவச அரிசிக்கு ஈடாக ரூ.600 வீதம் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

News January 21, 2025

புதுச்சேரியில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி

image

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 5 நாட்கள் நடைபெறும் தென்னிந்திய அறிவியல் கண்காட்சியை இன்று (21-1-25) துணை நிலை ஆளுனர் கைலாஷ் நாதன், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர். இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார்.

News January 21, 2025

நாட்டு வெடிகுண்டு வீசிய 5 பேர் கைது

image

புதுச்சேரி கோவிந்த சாலை வாஞ்சிநாதன் வீதியில் கண்டாக்டர் தோட்டம் லோகபிரகாஷ், அவரது கூட்டாளிகள் ஹேமந்த், குபேர் நகர் விஜயராகவன் மற்றும் சிறார்கள் மூவர் நாட்டு வெடிகுண்டு வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதில் ஹேமந்த், விஜயராகவன் மற்றும் 3 சிறார்களை பெரியக்கடை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 21, 2025

புதுவை எஸ்பி எச்சரிக்கை

image

கிழக்கு போக்குவரத்து எஸ்.பி.செல்வம் தலைமையில் நடந்த வாகன சோதனையில், பைக் ஓட்டி வந்த 15 சிறார்கள், சிவாஜி சிலை அருகில் நடத்திய சோதனையில், 4 சிறார்கள் சிக்கினர்.இவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைக்கப்பட்டனர். தண்டனை, அபராதம் தொடர்பான சட்ட விதிகள் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. சிறார்கள் வண்டி ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், பெற்றோர்களை கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

News January 21, 2025

புதுச்சேரி: குழந்தைகள் புத்தக கண்காட்சி நாளை தொடக்கம்

image

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியப்பெருமாள் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கருவடிக் குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் குழந்தைகள் புத்தக மற்றும் விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி நாளை புதன்கிழமை தொடங்கி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

News January 21, 2025

மிரட்டல் வந்தால் உடனே தெரியப்படுத்தவும்: எஸ்பி

image

புதுவை இணையவழி சீனியர் எஸ்.பி. நாரா சைத்தன்யா நேற்று சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழக வேண்டாம். உங்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏதேனும் மிரட்டல் வந்தால் உடனடியாக உங்கள் பெற்றோரிடமோ அல்லது காவல்துறைக்கோ அல்லது உங்கள் நம்பிக்கை கூறியவர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தவும் அல்லது 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

புதுச்சேரிக்கு 24 ஆவது இடம்

image

புதுச்சேரியில் சொந்த தொழில் வருமானம் மூலம் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற விபரம் வெளியாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் தகவலின் படி புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டது. இந்தியாவின் 28 மாநிலம், 8 யூனியன் பிரதேசத்தில் புதுவை 24 ஆவது இடத்தில் உள்ளது. இதில் 160 பேர் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளனர்.

error: Content is protected !!