India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு நடப்பாண்டிற்கான பத்மஸ்ரீ விருதினை சற்றுமுன் அறிவித்துள்ளது. இதில் புதுச்சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரி திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை மாலை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அளிக்கும் தேநீர் விருந்தில், திமுக சட்டமன்றத் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தென்காசியை சேர்ந்தவர், அப்துல் புதுச்சேரி, பத்துக்கண்ணு அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். நேற்று இரவு தனது பைக்கில், நண்பருடன், பத்துக்கண்ணு நோக்கி சென்று கொண்டிருந்தார்.எதிரே வந்த ஆம்னி வேன், பைக் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த அப்துல் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் நேற்று வில்லியனூரில் உள்ள உள்துறை அமைச்சர் இல்லத்தில் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் பல்கலைக்கழக மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து, பெண் ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் டீனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி ஆல்பா பொறியியல் கல்லுாரியின் தாளாளர் பாஷிங்கம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ஆல்பா பொறியியல் கல்லுாரி நடத்தும் வேலைவாய்ப்பு முகாம், கேம்பஸ் டிரைவ் என்ற பெயரில் நாளை (ஜன.26) நடக்கிறது. கன்னியகோவில் பாகூர் சாலை ஆல்பா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பிரபல பி.டபுள்யூ டிசைன் குரூப் நிறுவனம் பங்கேற்று தனது நிறுவனத்திற்கு அதிக பணியாட்களை தேர்வு செய்ய உள்ளது.
புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள பெத்தி செமினார் சிபிஎஸ்இ பள்ளியில் பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமையில் யுகேஜி மாணவர்களின் சர்வதேச சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கும் முயற்சி இன்று மேற்கொள்ளப்பட்டது. விழாவில் முதல்வர் ரங்கசாமி கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர். விழாவில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு போலீசாரும் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதையடுத்து எஸ்பிக்கள் சுப்ரமணியன், பாலச்சந்திரன் ஆகியோரது முன்னிலையில்காவல் நிலைய அதிகாரிகளுக்கு e-Chellan கருவிகளை மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மி சௌஜன்யா வழங்கினார் வழங்கினார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி கல்வித் துறை மூலம் பள்ளிகளில் வகுப்பறைகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் சுமார் 1,664 அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு கைக்கணினி (TABLET) வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்
புதுவை சேதராப்பட் 13 வயது சிறுமி, சில நாள் முன்பு பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பின் வீடு திரும்பினாா். அவரிடம் பெற்றோா் விசாரித்தில் வேலூா் மாவட்டம், சின்னமோட்டூர் காா்த்தியுடன் வாட்ஸ் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இந்நிலையில், சிறுமியை ஏழுமலை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. பின்னர், சேதராப்பட்டு போலீசார் ஏழுமலையை போக்சோவில் கைது செய்தனா்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26ம் தேதி, பாகூர் கொம்யூனுக்கு உட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துக்களில், 5 கட்டங்களாக கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குடியிருப்புபாளையம், காட்டுக்குப்பம், குருவிநத்தம், மணமேடு, மூர்த்திக்குப்பம், பனித்திட்டு பரிக்கல்பட்டு, ஆகிய இடங்களில் நடைபெறும்
Sorry, no posts matched your criteria.