India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரிக்கு இன்று (03.04.2026) பிரதமர் வருகை தர உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை உறுதிசெய்யக் கலால் துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இன்று காலை முதல் இரவு 8 மணி வரை மதுக்கடைகள், சாராயம்/கள்ளுக்கடைகள் மற்றும் மது பரிமாறும் ஹோட்டல், உணவகங்கள் அனைத்தும் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுவை, வில்லியனூரை சேர்ந்த நபர் செல்போனில் கடன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் அவரின் புகைப்படம் & பிற விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளார். அதன்பின் அவரின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் அவரின் புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டியதால், ரூ.14 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி, அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி ஆதரித்து, தெலுங்கானா துணை முதலமைச்சர் (Deputy Chief Minister) மல்லு பாட்டி விக்ரமார்க்கா முருங்கப்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் போது, அவருக்கு மாலை அணிவித்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன் கூட்டணி கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் ரோடுஷோ நிகழ்ச்சி புதுச்சேரியில் நாளை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ராஜ்பவன் தொகுதி அஜந்தா சிக்னலில் இருந்து, அண்ணா சாலை வழியாக அண்ணா சிலை வரை இந்த ரோடுஷோ நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் பாமக (ராமதாஸ் அணி) சார்பில், வேட்புமனு தாக்கல் செய்த வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் நரசிம்மன், இன்று சாரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் இந்த தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அதரவாக வாக்குகளை சேகரிக்க உள்ளதாகவும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் உறுதி அளித்தார்.

புதுச்சேரிக்கு நாளை (03.04.2026) பிரதமர் வருகை தர உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை உறுதிசெய்ய கலால் துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு 8.00 மணி வரை மதுக்கடைகள், சாராயம்/கள்ளுக்கடைகள் மற்றும் மது பரிமாறும் ஹோட்டல், உணவகங்கள் அனைத்தும் கட்டாயமாக மூடப்பட வேண்டும் கலால் துறை உத்தரவு அறிவித்துள்ளது.

புதுச்சேரி, சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் முன்னிலையில், ரெட்டியார் பாளையம் தேர்தல் அலுவலகத்தின் பாதுகாப்பு அறையிலிருந்து, வாக்குப்பதி இயந்திரங்கள் லாஸ்பேட்டையில் உள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள தற்காலிக பாதுகாப்பு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி நாளை (03.04.2026) பிரச்சாரத்தை சர்தார் வல்லபாய் பட்டேல் (அஜந்தா சிக்னலில்) தொடங்கி, ராஜா திரையரங்கம் வரை பிரம்மாண்ட பிரச்சார ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளார். இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு, மத்திய அமைச்சர் மனசுக் மாண்டவியா இன்று நேரில் ஆய்வு செய்து, ஏற்பாடுகளை பரிசீலித்தார்.

புதுச்சேரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தி ஏப்ரல் 6-ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது, அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்தியா கூட்டணி (INDIA Alliance) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இத்தகவலை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.