Pondicherry

News April 2, 2026

புனித வெள்ளி – புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மனிதகுலத்தின் மீட்புக்காக இயேசு பிரான் பட்ட துயரங்களையும், கல்வாரியில் அவரது தியாகத்தையும் அடையாளப்படுத்தும் புனித வெள்ளியன்று, அவர் நம்மீது எப்போதும் பொழியும் அன்புக்காக நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். கிறித்துவ சமூகத்தவருக்கு ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் கொண்டுள்ள இந்த நன்நாளில் மகிழ்ச்சி பெருகட்டும் என்றார்.

News April 2, 2026

புதுச்சேரி: பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடக்கிறது. அதனை முன்னிட்டு தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள், வாக்குச்சாவடிகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் பெரும்பாலான பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளதால், அந்தந்த வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் பணிகளுக்காக அனைத்து பள்ளிகளுக்கும் நாளை 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

News April 2, 2026

புதுச்சேரி: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE

image

புதுச்சேரி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

புதுச்சேரிக்கு மோடி, அமித்ஷா, விஜய் வருகை

image

புதுச்சேரியில் வருகிற 7-ம் தேதி உடன் பிரச்சாரம் முடிவடையுள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நாளை மோடியும், 6ம் தேதி அமித்ஷா, ராகுல், ஸ்டாலின், ஆகியோரும், 5ம் தேதி எடப்பாடி மற்றும் விஜய் ஆகியோரும் புதுச்சேரிக்கு வருகை தர உள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News April 2, 2026

புதுச்சேரி: B.E படித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு

image

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News April 2, 2026

புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

image

புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் மோடி வரும் மூன்றாம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதை அடுத்து லாஸ்பேட் விமானநிலையச் சாலை முதல் லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பு வரை மற்றும் சிவாஜி சிலை சந்திப்பு முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் (ECR) வரை எல்லா கனரக வானங்கள் தடை இருக்கும் மேலும் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News April 2, 2026

புதுச்சேரி: விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடங்கள்

image

புதுச்சேரியில் வரும் 4ம் தேதி அன்று, காலாப்பட்டு தொடங்கி முள்ளோடை வரை மொத்தம் 23 இடங்களில் வாகனத்தில் பிரச்சாரம் செய்ய த.வெ.க சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருதி, கொக்கு பார்க், வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம், சோனாம்பாளையம் சந்திப்பு மற்றும் வில்லியனூர் கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்ய புதுச்சேரி காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

News April 2, 2026

புதுச்சேரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!