India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி ஆளுநர் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் நாளை 17/02/2025 (திங்கட்கிழமை) மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியர் வளாகத்தில் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியின் ரோட்டரி கிளப்ஸ் பாண்டிச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 16, 2025 அன்று வேலைவாய்ப்பு கண்காட்சி சாரதா கங்காதரன் கல்லூரியில் நடத்துகிறது. தொழில் தொடங்க வேலை தேவைப்படுபவர்கள் கண்காட்சியில் கலந்துகொள்ளலாம். 7ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டதாரி வரை தகுதியான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றது., காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது.
பள்ளி சிறுமி மீதான பாலியல் சீண்டலை கண்டித்து புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். சங்கத்தின் மாநில தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகளான வந்தனா, ஸ்டீபன் ராஜ், அபிஜித் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பிரவீன் குமார் கண்டன உரையாற்றினார். இதில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்கால் நாகை மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை அரசை கண்டித்தும், அங்குள்ள மீனவர்கள் மற்றும் படகை விடுவிக்க கோரியும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவ கிராம மக்கள் இன்று 15-2-25 ஐந்தாவது நாள் போராட்டமாக, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மற்றும் தங்கள் சட்டைகளில் கருப்பு கொடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. அதன்படி, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்காக புதுச்சேரியில் 21, காரைக்காலில் 10, மாஹே 3, ஏனாமில் 2 என மொத்தம் 35 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய 13 உதவி ஆய்வாளா்கள் நேற்று திடீர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மேட்டுப்பாளையத்தில் பணியாற்றிய அருள், உருளையன் பேட்டைக்கும், திருநள்ளாரில் பணியாற்றிய லெனின் ராஜீ மாகேவிற்கும், காரைக்கால் டவுனில் பணியாற்றிய வேல்முருகன் மாகி பண்டக்கலுக்கும், மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை புதுவை தலைமைக் காவல் கண்காணிப்பாளா் சுபம் கோஷ் உத்தரவிட்டுள்ளாா்.
ஆரோவில்லை சேர்ந்த சரண்ராஜ் குயிலப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில், குணா ஆகிய மூன்று பேரும் கொத்தனார் வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு பத்துகண்ணு என்ற இடத்தில் கடப்பேரி குப்பத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். வில்லியனூர் துத்திப்பட்டு அருகே சென்றபோது, சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதி, மூன்று பேர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுச்சேரி திமுக சார்பில் இன்று செமஸ்டர் வினாத்தாளை மாற்றி மாணவர்களை குழப்பிய புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சதிகாரப் போக்கையும் மத்திய பாஜக அரசின் ஓரவஞ்சன செயல்பாடுகளையும், தேசிய கல்விக் கொள்கையின் குளறுபடிகளையும் கண்டித்து இன்று காலாப்பட்டில் அமைந்துள்ள பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொள்ள உள்ளனர்.
புதுவை தீயணைப்பாளர் & தீயணைப்பு வாகன ஓட்டுநர் நிலை -3 பணியிடத்திற்கான தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தீயணைப்பாளர் (ஆண்கள்) பொதுப் பிரிவில் ஹரிகரன் 82.25 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மோகன்ராஜ் 70.26 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பெற்றனர். பெண்கள் பொது பிரிவில் அனந்தமொழி 69.75 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று புதன்கிழமை (பிப். 12) கூடும் என பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார். இதில் மாநிலத்தின் கூடுதல் செலவினங்களுக்கு சபையின் முன் அனுமதி பெறுதல், சபை முன் வைக்கப்படும் ஆவணங்கள் இருப்பின் அவை வைக்கப்படுவதுடன், தணிக்கை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படும். எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்ய உள்ளது.
Sorry, no posts matched your criteria.