Pondicherry

News April 9, 2026

புதுச்சேரியில் 17.41% வாக்கு பதிவு

image

புதுச்சேரி இன்று சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 17.41% வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு மொத்தம் 9,50,639 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் வாக்கை செலுத்திவிட்டீர்களா? கமெண்ட் பண்ணுங்க!

News April 9, 2026

புதுச்சேரி: வாக்குப்பதிவு பணியில் 4,836 அரசு ஊழியர்கள்

image

புதுச்சேரி பிராந்தியத்தில் தேர்தல் பணிக்காக மொத்தம் 4,836 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்புப் பணிக்காக 2,791 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுமட்டும் அல்லாது, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

News April 9, 2026

புதுச்சேரி: மது கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு

image

புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் உள்ள கலால்துறை அலுவலகத்தில் மதுக் கடத்தலைத் தடுக்க பிரத்யேகமாக ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் 19 செக்-போஸ்ட்கள் அமைக்கப்பட்டு, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தலைமையிலான குழுவினர் இந்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 9, 2026

புதுச்சேரி: 1099 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தீவிரம்

image

30 சட்டமன்ற தொகுதிகள் உள்ள புதுச்சேரிக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது இதனை ஒட்டி 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் புதுச்சேரியில் உள்ள 1099 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் இன்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

News April 9, 2026

புதுச்சேரி: வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்

image

பாகூர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுகள் வழங்க முயன்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர்கள், பணம் மற்றும் மளிகைப் பொருட்கள் பெற டோக்கன்கள் விநியோகித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் டோக்கன்களைச் சாலையில் வீசி தப்பியதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

News April 9, 2026

புதுச்சேரியில் தொடங்கிய வாக்குப்பதிவு

image

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. முன்னதாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) தொடங்கி நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் எந்த கோளாறும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 9, 2026

புதுச்சேரி: ட்ரான் மூலம் 36000 ரூபாய் கண்டுபிடிப்பு

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ட்ரோன் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ட்ரோன் கண்காணிப்பின் மூலம் கிடைத்த தகவலின்பேரில் தேர்தல் பறக்கும் படையினர் திருநள்ளாறு கொம்யூன் நெய்வாச்சேரி கிராமத்தில் சாலையோரம் இருந்த முட்புதரில் கிடந்த ரூ.36,000 கைப்பற்றி திருநள்ளாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு தருவதற்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

புதுச்சேரிக்கு வந்த சர்வதேச தேர்தல் பிரதிநிதிகள்

image

புதுச்சேரியில் நாளை நடைபெறும் தேர்தல் நடைமுறைகளை பார்வையிட இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர். கிர்கிஸ் குடியரசு, ஐவரி கோஸ்ட், மால்டோவா, மங்கோலியா, கயானா மற்றும் பூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த, தேர்தல் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள 9 பிரதிநிதிகள் இந்த பார்வை பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

error: Content is protected !!