Pondicherry

News April 9, 2026

புதுச்சேரி: ஜோஸ் சார்லஸ் மார்டின் வாக்களிப்பு

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் மனைவி சிந்து ஶ்ரீ சார்லஸ் ஆகியோர், ரெட்டியார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள இமாக்குலேட் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

News April 9, 2026

புதுச்சேரி: தனது வாக்கை பதிவு செய்த சபாநாயகர்

image

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில், மணவெளி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், தற்போதைய சபாநாயகருமான ஆர். செல்வம் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தவளக்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சார்யா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு, காலை நேரத்திலேயே வந்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

News April 9, 2026

புதுச்சேரி: தனது வாக்கை பதிவு செய்த சபாநாயகர்

image

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில், மணவெளி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், தற்போதைய சபாநாயகருமான ஆர். செல்வம் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தவளக்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சார்யா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு, காலை நேரத்திலேயே வந்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

News April 9, 2026

புதுச்சேரி: பைக்கில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி

image

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய முதல்வர் ரங்கசாமி, வழக்கம் போல யமஹா பைக்கில் வாக்குச்சாவடிக்குப் புறப்பட்டார். அதிகாரப்பூர்வ வாகனங்களைத் தவிர்த்து எளிமையான முறையில் அவர் சென்றது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தனது நீண்டநாள் பழக்கத்தை தொடர்ந்த ரங்கசாமி, பாதுகாப்பு அதிகாரிகளுடன் சுருக்கமான ஏற்பாடுகளோடு பயணம் மேற்கொண்டார்.

News April 9, 2026

புதுச்சேரி கண்காணிப்பு மற்றும் புகார் எண்கள் அறிவிப்பு

image

புதுச்சேரி தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க சிறப்பு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) – 0413-1950, 99658 37377, 94434 34972 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், மாவட்டத் தேர்தல் அதிகாரியின் அலுவலக கட்டுப்பாட்டு அறை 0413-2299558, 94433 75089 என்ற எண்களிலும் புகார்கள் அளிக்கலாம்.

News April 9, 2026

புதுச்சேரி: நம்பிக்கை தெரிவித்த முன்னாள் நாராயணசாமி

image

புதுச்சேரியில் தனது வாக்கை பதிவு செய்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பின்னர் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிவித்தார். ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி புதுச்சேரியில் பிரச்சாரம் செய்து வாக்குறுதிகள் அறிவித்ததன் தாக்கமாக, மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News April 9, 2026

காரைக்காலில் அமைக்கப்பட்ட தனித்துவமான வாக்குச்சாவடி

image

புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு, காரைக்கால் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் துறை சார்பில், வாழை இலை கட்டி தனித்துவமான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் பாரம்பரிய தொழிலான மீன்பிடித்தல், விவசாயம், கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை வாக்காளர்கள் பார்வையிட்டு வாக்களித்து வருகிறார்கள்.

News April 9, 2026

புதுவையில் வாக்களித்தார் அமைச்சர் நமச்சிவாயம்

image

புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மாநிலம் முழுவதும் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட திருக்கனூரில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளி வாக்குச்சாவடியில், இன்று அமைச்சர் நமச்சிவாயம் தனது துணைவியார் வசந்தி அவர்களுடன் வந்து தனது வாக்கினை பதிவிட்டார்.

News April 9, 2026

BREAKING: வாக்களித்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

image

புதுச்சேரி இன்று சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இருசக்கர வாகனத்தில் வருகை தந்து திலாஸ்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

News April 9, 2026

புதுவையில் வாக்களித்த ஆளுநர் கைலாஷ்நாதன்

image

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு, 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி மாநில துணை நிலைய ஆளுநர் கைலாஷ்நாதன் ராஜ்பவன், தொகுதிக்குட்பட்ட சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

error: Content is protected !!