Pondicherry

News March 19, 2024

புதுச்சேரியில் நாளை மின்தடை

image

புதுச்சேரி மேட்டுப்பாளையம் மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 03 மணி வரை ஹரி நமோ நகர் பிரியதர்ஷினி நகர். ராஜா அண்ணாமலை நகர். காமராஜ் நகர். இஸ்ரவேல் நகர். குரு நகர். ராஜீவ் நகர். சிவாஜி நகர். இந்திரா நகர். நாவர்குலம் . அசோக் நகர். போன்ற இடங்களில் மின் தடை ஏற்படும் என்று மின்துறை அறிவித்துள்ளது.

News March 18, 2024

ஜிப்மர்ரில் அதி நவீன எந்திரம் மூலம் நவீன சிகிச்சை

image

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இரத்த நாளங்கள் மிக துல்லியமாக கண்டறியும் அதீ நவீன எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் இரத்த ஒட்ட மதிப்பீடு. சி டி கண்டறிதல் இரத்த குழாய் பிரச்சனை முதுகு தண்டு பிரச்சனை போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை ஜிப்மர் இப்போது தொடங்கியுள்ளது. இது ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை செயல்படும் என ஜிப்மர் நிர்வாகம்அறிவித்துள்ளது

News March 18, 2024

பொய்யான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

image

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்நிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ், காரைக்காலில் தேர்தல் நேரத்தில் சமூகவலைத்தளங்களில் தேர்தல் குறித்து பொய்யான செய்திகள், தனி நபர் தாக்குதல், அனுமதி இன்றி தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம்-காரைக்கால் எல்லையில் மது கடத்தல் குறித்து சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

News March 18, 2024

புதுவையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வாகனங்கள் ஒப்படைப்பு

image

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்றத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள் வழங்கப்பட்ட கார்களை ஒப்படைக்க வேண்டும் என பேரவை செயலர் அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு வழங்கிய வாகனத்தை புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கொண்டு வந்து ஒப்படைத்து வருகின்றார்கள்.‌

News March 18, 2024

புதுவை: காரைக்காலில் துப்பாக்கிகள் வைத்திருக்க தடை

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காரைக்காலில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால், துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றுள்ளவர்கள் உடனடியாக துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

News March 18, 2024

புதுவை விசாரணை அதிமுக வலியுறுத்தல்

image

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பாஜக. காங்கிரஸ் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கோடிக்கணக்கான பணம் கையூட்டு பெறப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மாநிலத்தில் இரிடியம் கடத்தப்படுவதாக கூறியுள்ளார். இது பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

News March 18, 2024

புதுச்சேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ்

image

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக வி.வைத்திலிங்கம் போட்டியிடு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.

News March 18, 2024

புதுச்சேரியில் தமிழிசை போட்டி?

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்த தனது ராஜினாமாக கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இவர் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

News March 18, 2024

புதுச்சேரியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

image

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்க கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவசர செயல்பாட்டு மையத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டு பாட்டு மையத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் அளிப்பதற்கான கட்டணம் இல்லா தொலைபேசி 1950 (ம) சிவிஜிலி மூலம் புகார்கள் பெறப்படும் என்று தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் அறிவித்துள்ளார்.

News March 17, 2024

புதுவை: எல்லைப் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று(மார்ச்.17) செய்தியாளர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் முழுவதும் 72 மணி நேரத்திற்குள் அரசியல் தொடர்பான பேனர்கள், சுவரொட்டிகளை அகற்ற அரசியல் கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் – தமிழகம் எல்லை சோதனை சாவடிகளில் பறக்கும்படை மற்றும் போலீசார் சோதனை பணியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!