India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஓட்டுப்பதிவு நாளன்று அனைத்துத் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 10 மணி வரைக்கும் பரவலான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்டத்திற்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு பட்ட மேற்படிப்பு மையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து இன்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் 164 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக அனுப்புவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனீஷ் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில செயல் வீரர்கள் கூட்டம் மாநில தலைவர் செல்வகணபதி தலைமையில் இன்று நடைபெற்றது. தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மேலும் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ன, வேட்பாளர் நமச்சிவாயம், அமைச்சர் சாய் ஜெய் சரவணகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங் வேட்பாளர் வைத்திலிங்கம் இன்று லாஸ்பேட்டை தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் தருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது எனவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டே மாதங்களில் 30 லட்சம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்து வாக்கு சேகரித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 10 மணி வரைக்கும் பரவலான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்டத்திற்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வரும் தேசிய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தற்போது, ஜாபர் சாதிக் நண்பரான, புதுவை காங்கிரஸ் பிரமுகர் ஈரம் ராஜேந்திரன் விசாரணைக்கு எதிர்வரும் 14, 15 ஆம் தேதிகளில் டெல்லியில் உள்ள தங்கள் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் ரம்ஜான் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள். இஸ்லாத்தில் ஐந்து ஒழுக்க நெறிகளில் ஒன்றாக நோன்பு உள்ளது. ரம்ஜான் மாத காலத்தில் பிறரை மன்னித்தல், நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ள நபிகள் நாயகம் வலியுறுத்தினார். இதனால் ரம்ஜான் மாதத்தில் உடல் தூய்மையுடன் உள்ள தூய்மையும் பெறுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். ரமலான் என்பது நோன்பு மட்டும் கடைப்பிடிப்பதை நோக்கமாகக் கொள்ளாமல், பசித்தவா்களுக்கு உணவளித்தல், ஏழைகளுக்கு உதவுதல், மன்னித்தல் போன்ற நற்பண்புகளை தொடா்ந்து கடைப்பிடிப்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
காரைக்கால் அடுத்த திருபட்டினம் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வந்த கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்ததால் மாணவர்களின் பாதுகாப்பை கருதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பல கட்ட ஆலோசனைக்கு பிறகு இன்று பழைய கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.