India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்த தனது ராஜினாமாக கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இவர் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்க கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவசர செயல்பாட்டு மையத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டு பாட்டு மையத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் அளிப்பதற்கான கட்டணம் இல்லா தொலைபேசி 1950 (ம) சிவிஜிலி மூலம் புகார்கள் பெறப்படும் என்று தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் அறிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று(மார்ச்.17) செய்தியாளர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் முழுவதும் 72 மணி நேரத்திற்குள் அரசியல் தொடர்பான பேனர்கள், சுவரொட்டிகளை அகற்ற அரசியல் கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் – தமிழகம் எல்லை சோதனை சாவடிகளில் பறக்கும்படை மற்றும் போலீசார் சோதனை பணியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேர்தல் காலகட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும் புதுச்சேரி போலீசாருடன் புதுச்சேரிக்கு வந்த துணை ராணுவ படையினருடன் புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19ஆம் தேதி (ம) வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்றும் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனவே புதுச்சேரி. காரைக்கால். மாகே. ஏணாம் போன்ற பகுதிகளில் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மா.தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
காரைக்கால் அடுத்த கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் மற்றும் மீனவர்களை ஒரே வாரத்தில் கைது செய்த நிலையில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குடும்பங்களை நேற்று இரவு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார்.
முதலியார் பேட்டை தொகுதி வேல்ராம்பட்டு இன்ஜினியர்ஸ் காலனி பகுதியில் கட்டப்பட்டுள்ள 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு அடுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான
மேம்படுத்தப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்தார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வீட்டில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்ற சீட்டை ரூ.50 கோடிக்கு பேரம் பேசி விற்க முயற்சிக்கின்றனர். ஒரு அமைச்சர் தொடர்ந்து பல முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அவர் வெளிநாடு சென்று வருவது குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
புதுச்சேரியில் வரும் கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாட திட்டம் அமுல் படுத்துவதால் மாணவர் சேர்க்கை வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தற்போது நடைபெறும் தேர்வுகள் முடிந்ததும், மார்ச்.24 முதல் 31 ஆம் தேதி வரையிலும், மே.01 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 03ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.