Pondicherry

News January 8, 2026

புதுவை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளம் மூலமாக LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 8, 2026

புதுவை: விடுமுறையில் பள்ளிகளை இயக்க அறிவிப்பு

image

புதுச்சேரியில் டிட்வா புயல் காரணமாக கடந்த நவம்பர் 29-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய புதுவையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு வரும் 10-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடத் திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

News January 8, 2026

புதுவை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு

image

புதுவைப் பல்கலைக்கழகம், தமிழியற்புலத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியத்தில் சேர விரும்பும் மாணவர்கள் (NTA) நடத்தும் CUET-PG 2026 தேர்விற்கு வருகிற 14/01/2026-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் வருகிற கல்வியாண்டில் (2026-2027) இளங்கலை மற்றும் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு (66%) குறைக்கப்படும் எனப் புதுவைப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் அறிவித்துள்ளார்.

News January 8, 2026

புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News January 8, 2026

புதுச்சேரி ஜிப்மருக்கு தேசிய அளவில் விருது

image

இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கும் 2024–2025 ஆம் ஆண்டிற்கான ‘காயகல்ப்’ விருது திட்டத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இதற்காக ஜிப்மருக்கு ரூ.40 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தூய்மை, சுகாதாரம் மற்றும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கியதற்கான இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2026

புதுவை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

புதுவை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <>இங்கு கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

புதுவை: கால்நடை உரிமையாளர் மீது வழக்கு

image

நிரவி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீரன்கோவில் தெரு அருகே ரோந்து சென்றார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக பைபாஸ் சாலை சந்திப்பில்
மாடு ஒன்று சுற்றித்திரிந்தது. அதுபற்றி விசாரித்ததில், மேலஓடுதுறையைச் சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்பவரின் மாடு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 8, 2026

புதுவை: கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது

image

கோரிமேடு உதவி ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக அந்த வழியாக வந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சாரம் முத்துரங்கசெட்டி நகரைச் சேர்ந்த புவேனேஷ் (24), முதலியார்பேட்டையைச் சேர்ந்த பாலா (23) என்பதும்; அவர்களிடம் கஞ்சா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

News January 8, 2026

புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை என அறிவிக்கப்பது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

News January 8, 2026

புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை என அறிவிக்கப்பது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

error: Content is protected !!