Pondicherry

News January 10, 2026

காரைக்கால்: மருத்துவரின் வருகை தேதி மாற்றம்

image

காரைக்கால் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி தனது செய்து குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் இருந்து (16.1.2026) அன்று காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வருகை தர இருந்த சிறப்பு மருத்துவர்களின் வருகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் (23.01.2026) வெள்ளிக்கிழமை அன்றைக்கு மாற்றப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

காரைக்கால்: மருத்துவரின் வருகை தேதி மாற்றம்

image

காரைக்கால் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி தனது செய்து குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் இருந்து (16.1.2026) அன்று காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வருகை தர இருந்த சிறப்பு மருத்துவர்களின் வருகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் (23.01.2026) வெள்ளிக்கிழமை அன்றைக்கு மாற்றப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2026

காரைக்கால்: ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை

image

காரைக்கால், தெற்கு கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில், நாளை (ஜன.10) மிக கனமழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News January 9, 2026

எளிமையான முதலமைச்சர்: மலேசிய தமிழர்கள் பெருமிதம்

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்த மலேசியத் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். “இவ்வளவு எளிமையான முதலமைச்சரை இதுவரை பார்த்ததே இல்லை” எனத் தெரிவித்த அவர்கள், ரங்கசாமியின் பணிவு, நடத்தை, பேசும் முறை ஆகியவை மனதை கவர்ந்ததாகக் கூறினர். மலேசியத் தமிழர்கள், புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காக தாங்களும் பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

News January 9, 2026

புதுச்சேரி: பில்லி சூனியம் நீங்க இந்த கோயில் செல்லுங்கள்

image

புதுச்சேரியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் ஏவல், பில்லி, சூனியம், தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 9, 2026

காரைக்கால் மருத்துவமனைக்கு ஜிப்மர் மருத்துவர்கள் வருகை

image

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு, நாளை சனிக்கிழமை நாளை (10.01.2026) காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை வருகை புரிந்து சர்க்கரை மற்றும் தைராய்டு சம்பந்தமாக சிகிச்சை அளிக்க உள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது‌. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 9, 2026

புதுச்சேரி: Diploma போதும்.. அரசு வேலை ரெடி

image

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, Any Degree
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 9, 2026

புதுச்சேரி: 70 மேல்நிலை எழுத்தர்களுக்குப் பதவி உயர்வு

image

புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரையறுக்கப்பட்ட துறை சார்ந்த போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 17-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 மேல்நிலை எழுத்தர்கள் தகுதி வாய்ந்தவர்களாக நியமிக்கப்பட்டு, உதவியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு செயலர் முருகேசன் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 9, 2026

புதுச்சேரி: சாலை விபத்தில் காய்கறி வியாபாரி பலி

image

புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி லதா (60), நேற்று தவளக்குப்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கினார். புதுச்சேரி – கடலூர் சாலையை அவர் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த டெம்போ டிராவலர் மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் தற்போது இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

புதுவை பல்கலைக்கழக தேர்வு – அவகாசம் நீட்டிப்பு

image

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, பி.ஹெச்.டி சேர்க்கை (நுழைவு வகை) 2026-27 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் – 30.01.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி பல்கலைக்கழகம் 2026-27 கல்வியாண்டுக்கான பி.எச்.டி சேர்க்கை (நுழைவுப் பிரிவுக்கான) ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 30.01.2026 வரை நீட்டித்துள்ளது.

error: Content is protected !!