Pondicherry

News March 24, 2024

புதுவையில் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர்

image

புதுச்சேரி மக்களவைத் தேர்தல் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழ் வேந்தன் நேற்று உழவர்கரை தொகுதி சமூக சேவகரும் வழக்கறிஞரும் ஆன சசிபாலனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்தார். மேலும் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநில மற்றும் தொகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

News March 23, 2024

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வேண்டும்

image

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயத்திடம் காவல்துறை
உள்ளிட்ட முக்கிய துறைகள் உள்ளன. எனவே தேர்தலின் போது அவர் துறைசார்ந்த அரசு இயந்திரம் அவருக்கு ஆதரவாக செயல்படக் கூடிய சூழல் உருவாகும். ஆகவே உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்தார்.

News March 23, 2024

தேர்தல்: நேரடியாக மோதும் பாஜக-காங்கிரஸ்

image

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் நமச்சிவாயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் வைத்தியலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன மக்களே?

News March 23, 2024

பாஜக வேட்பாளருக்கு முதல்வர் வாழ்த்து

image

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மக்களவைத் தேர்தல் வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை கட்சி தலைமை அறிவித்த நிலையில், புதுச்சேரிக்கு வருகை தந்த நமச்சிவாயத்தை பாஜக நிர்வாகிகள் நேற்று இரவு புதுச்சேரி எல்லைப் பகுதியில் மலர்கள் தூவி வாழ்த்துக்கள் கூறி வரவேற்றனர். தொடந்து பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.

News March 22, 2024

தமிழக முதல்வரிடம் புதுவை காங் தலைவர் வாழ்த்து

image

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் திருச்சி தேர்தல் பரப்புரை பயணத்தின் போது புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம்  இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா, நாஜிம், சம்பத், எம்எல்ஏக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

News March 22, 2024

புதுவை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்

image

புதுச்சேரி ஆளுனராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பதவி ராஜினாமா செய்தியை தொடர்ந்து இன்று ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார். இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டனர்.

News March 22, 2024

புதுச்சேரி: தமிழிசை டெபாசிட் இழப்பார்

image

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து இந்தியா கூட்டணி கட்சியின் செயல்பாடுகளை முடக்க முடியாது. புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்போம். மேலும் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை டெபாசிட் இழப்பார் எனத் தெரிவித்தார்.

News March 22, 2024

தேர்தல்: பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தே.ஜ. கூட்டணியின் பாஜக வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

News March 22, 2024

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய கூட்டணி கட்சி சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மீண்டும் வைத்தியலிங்கம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது எம்.பியாக உள்ளார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 22, 2024

ஆயுதங்களுடன் 7 பேர் கைது

image

தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட போலீசார், மதன், கௌதம், சரண், பிரேம்குமார், லோகேஷ், கார்த்திக் உட்பட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!