Pondicherry

News May 2, 2024

புதுவையில் குரு பெயர்ச்சி விழா

image

புதுவை பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நவகிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பஞ்சமூர்த்திகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்த நேரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News May 1, 2024

காரைக்கால் அம்மையார் பெயரை சூட்ட கோரிக்கை

image

காரைக்கால் மக்கள் நலக்கழகம் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் மணிகண்டனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு அவசிய மற்றும் அவசர தேவையான மாஸ்டர் பிளான் பணியை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டுகிறோம் காரைக்கால் ரயில் நிலையத்திற்கு காரைக்கால் அம்மையார் பெயரை சூட்ட மத்திய ரெயில்வே துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

News May 1, 2024

புதுவையில் பொலிவிழந்த கடற்கரை சாலை காந்தி சிலை!

image

புதுச்சேரியில் பல அழகிய இடங்கள் அமைந்துள்ளன.பழங்கால நினைவு சின்னங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. குறிப்பாக புதுச்சேரி கடற்கரையையொட்டி பல நினைவு சின்னங்கள் அமைந்துள்ளன. தற்போது காந்தி சிலையும், அதனைச் சுற்றியுள்ள கல் தூண்களும் சுத்தமின்றி, பொலிவிழந்த நிலையில் காட்சியளிக்கின்றன. காந்தி சிலையின் முகத்துக்கு நேராக அமைக்கப்பட்டுள்ள இரண்டு எல்இடி மின்விளக்குகள் மட்டுமே எரிகின்றன

News May 1, 2024

புதுவை – குமுளி புதிய பேருந்து

image

புதுவை- குமுளி வழித்தடத்தில் இயக்கப்படும் பழைய பஸ்சுக்கு பதிலாக, புதிய பிஆர்டிசி பஸ் சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, தேனி வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு குமுளி சென்றடைகிறது. புதுவையில் இருந்து குமுளிக்கு முன்பதிவுடன் சேர்த்து பஸ் டிக்கெட் கட்டணமாக ரூ.450 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

புதுமையான கற்பித்தல் முறைகள் குறித்த கருத்தரங்கு

image

லாஸ்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் புதுமையான கற்பித்தல் முறைகள் குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கில் புதுவையின் 4 பிராந்தியங்களிலும் இருந்து ஆசிரியர்கள் கலந்து கொண்டு கற்பித்தல் முறை பற்றி கூறினார். கேந்திர வித்யாலாய சங்கேதனின் முன்னாள் துணை ஆணையர் பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறந்த 10 புதுமையான கற்பித்தல் முறைகளை தேர்வு செய்தனர்.

News April 30, 2024

புதுச்சேரி ஆளுநர் ராதாகிருஷ்ணன் மே தின வாழ்த்து

image

உழைக்கும் மக்களின் பெருமையையும் தியாகத்தையும் உலகத்திற்கு பறைசாற்றும் இந்த சர்வதேச உழைப்பாளர் தினத்தில் உலகமெங்கும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பாளர்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைத்து நிலையிலும் புதுச்சேரி அரசு துணை நிற்கும் என்று புதுச்சேரி ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

News April 30, 2024

காரைக்கால் மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை

image

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து குழந்தை அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகவியல், இதயவியல் மற்றும் மனநல மருத்துவம் சம்பந்தமான சிறப்பு மருத்துவர்கள் வரும் மே.3ஆம் தேதி அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தந்து காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 30, 2024

வதந்தியை நம்பவேண்டாம்: புதுச்சேரி பல்கலைக்கழகம்

image

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புக்கு ஏப்.30 கடைசி தேதி என வெளியான செய்திக்கு முதுகலை படிப்புக்கு என்று எந்த கடைசி தேதியும் நிர்ணயிக்கவில்லை என்றும், மாணவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pondiuni.edu.in கிடைக்கும் தகவல்களை நம்புமாறு தெரிவிக்கப்பட்டது.

News April 30, 2024

பஜாஜ் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

image

புதுச்சேரி செட்டி வீதியில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் பிரபல ரவுடிகளை கையில் வைத்துக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் போல் தொலைபேசியில் கடனாளிகளை மிரட்டும் பஜாஜ் நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரி சமூக அமைப்புகளுடன் சட்டமன்றத் உறுப்பினர் நேரு தலைமையில் பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகம் முன்பு இன்று போராட்டம் நடைபெற்றது.

News April 30, 2024

புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

image

புதுச்சேரி கடற்பகுதியில் நெகிழி போத்தல்கள் மற்றும் மணல் மூட்டை கட்டி அதில் சவுக்கை போன்ற மரங்களின் கிளைகளை கொண்டு கடல் பகுதியில் இறக்கிவிட்டு அதன் மீது ஹூக்கான் (எ) அக்டி முறையில் சில மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறையில் மீன்பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி அரசின் மீன்வளத்துறை சார்பில் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!