Pondicherry

News May 9, 2024

புதுச்சேரி: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் இன்று(மே 9) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

புதுச்சேரி முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

image

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்று 3 ஆண்டுகள் முடிந்து, 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி நேற்று(மே 8)
புதுச்சேரி உள்துறை அமைச்சரும், மக்களவை வேட்பாளருமான நமச்சிவாயம் அவர்கள் முதல்வர் ரங்கசாமிக்கு பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

News May 8, 2024

புதுவையில் இன்று 95 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது

image

புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதில் புதுச்சேரி கடற்கரைகள், சாலைகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. புதுச்சேரியில் இன்று 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை மைய வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

புதுவை: போர் வீரர் நினைவுத் தூணில் ஆட்சியர் அஞ்சலி

image

இரண்டாம் உலகப்போர் நிறைவு பெற்றதன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் தூணில் புதுச்சேரி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பிரான்ஸ் அரசு சார்பில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதர் ழான் பிலிப் உத்தர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

News May 8, 2024

புதுவை: இளைஞர் உயிரிழந்த மருத்துவமனைக்கு சீல்

image

முத்தியால்பேட்டை சேர்ந்த ஹேமச்சந்திரன் உடல் எடை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதனையடுத்து, தமிழக அரசு உத்தரவின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்நிலையில் மருத்துவமனையை உடனடியாக மூட சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டதன் அடிப்படையில் இன்று பி.பி.ஜெயின் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

உலக செஞ்சிலுவை தினம் – புதுவை ஆளுநர் வாழ்த்து

image

உலக செஞ்சிலுவை தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மனிதகுல சேவையே உலக ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

என்.ஆர் கூட்டணி ஆட்சி மக்களை ஏமாற்றியது

image

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகளில் வாக்களித்த மக்கள் இந்த அரசால் ஏமாற்றப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எதற்காக வருகிறார்கள் என்று ஆராய உடனடியாக இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

News May 8, 2024

இனி நீங்களும் ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

News May 8, 2024

புதுவையில் பி.எஸ்.என்.எல் சிறப்பு மேளா

image

புதுவை பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம், இன்று (ஏப்ரல்.8)முதல் (ஏப்ரல்.10) வரை 3 நாட்களுக்கு நடக்கிறது. இந்த முகாம், மேட்டுப் பாளையம், முதலியார்பேட்டை, கரிய மாணிக்கம், மதகடிப்பட்டு, கோட்டக்குப்பம் அரும்பார்த்தபுரம், சாரம் வில்லியனுார், ரங்கப்பிள்ளை வீதி ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பி.எஸ்.என்.எல். சிம்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக முதன்மை மேலாளர் தெரிவித்துள்ளார்.

News May 8, 2024

ஹாக்கி வீரர்களுக்கு எம்.எல்.ஏ பாராட்டு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தண்டராம்பட்டு லயன்ஸ் மற்றும் லியோ சங்கம் சார்பில் முதலாமாண்டு மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில், முதல் பரிசை வென்ற புதுவை குருவிநத்தம் ஹாக்கி அணி வீரர்களை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேற்று பாராட்டினார். பயிற்சியாளர்கள் கார்த்திகேயன், அருண்குமார், விளையாட்டு ஆர்வலர் பாலகுரு மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்

error: Content is protected !!