India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மாநிலத்தில், வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், 120 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 918-ஆக உயர்ந்துள்ளது. மேலும் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வாக்காளர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தற்போது கூடுதலாக 120 புதிய வாக்குச்சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுவை பல்கலைக்கழகத்தில் 2026-27ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கியூட் (யூ.ஜி) நுழைவு தேர்வுக்கு https://cuet.nta.nic.in/ என்னும் இணைய முகவரியில் ஜன.30-ம் தேதி இரவு 11:30 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வரும் 31-ம் தேதி இறுதி நாளாகும் என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? <

அதிக லாபம் தரும் ஆன்லைன் டிரேடிங் ஆசையில் விழுந்து, புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேர், வாட்ஸ்ஆப் குழு மூலம் சுமார் 1.15 கோடி ரூபாய்க்கும் மேல் இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் செல்போன் எண்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. ஆகவே தேர்தல் பணியில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனை முன்னிட்டு, சட்டசபைத் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக அரசு ஊழியர்களின் விவரங்களை 19-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்துத் துறைகளுக்கும் கணக்கு மற்றும் கருவூலக துறை மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாணரப்பேட்டை சேர்ந்தவர் பிரகாஷ். ஓட்டுநரான இவர், தனது நண்பரான பூமியான்பேட்டையைச் சேர்ந்த தமிழ்மணி, என்பவருடன் உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் ஜன.14 மாலை மது அருந்தியுள்ளார். அப்போது, மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த தமிழ்மணி, பிரகாஷை தகாத வார்த்தையால் திட்டி, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் தமிழ்மணியை தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில், மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணிஉயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவையாகும். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

புதுவை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <

புதுவையில் சார்லஸ் மார்ட்டின் எல்ஜேகே என்ற புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து, தேர்தல் அரசியல் பணிகளை செய்து வருகிறார். அவரது கட்சியில் பலரும் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அவரை சீண்டுவது போல முதல்வர் ரங்கசாமி ஆதரவாளர்களின் சார்பில் “லாட்டரி விற்பனைக்கு அரசு அனுமதி வேண்டுவோர், ஆட்சிக்கு வர நினைப்போர் உள்ளே அனுமதி இல்லை” என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.